Navigation

Inhaltsbereich

Junger Mann
Junge Frau steht im Park
Mann lehnt an Wand

ஒத்துழைத்து முன்னேற்றும் மற்றும் குடிவரவு விடயங்கள் குறித்த கேள்விகளுக்கு Graubünden மாநிலத்தின் அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் ஒத்துழைத்து ஊக்குவிக்கும் துறைசார்நிலையம் பொறுப்புவகிக்கின்றது. உங்களுக்கு அகதியாக அங்கீகாரம் கிடைத்துள்ளதா அல்லது தற்காலிகமாக வசிப்பதற்குரிய ஒரு அனுமதியைப் பெற்றுள்ளீர்களா? அப்படியானால் நாங்களே உங்களது மொழி, சமூக மற்றும் தொழில் ஊக்குவிப்பிற்குப் பொறுப்பானவர்கள்.

ஒரு பிறநாட்டில் ஒரு புதிய வாழ்வை கட்டியெழுப்புவது மற்றும் சமூகத்தில் பங்கெடுப்பதற்கு காலங்கள் தேவைப்படுவதுடன் வழமையாக இது ஒரு நீண்ட செயற்திட்டமாகும். எமது ஆண் பெண் ஊழியர்கள் இதன்போது உங்களை வழிநடத்துவார்கள். எமது உதவி வழங்குதல்களில், நாங்கள் உங்களுக்கு வாழ்வதற்கான முக்கிய தகவல்கள் மற்றும் Graubünden இல் தொழில் புரிவது போன்ற முக்கிய விடயங்களை அறியத்தருவோம். எமது மாநிலத்தின் வரவேற்பு கைநூலை வாசிப்பதுடன் எமது இணையத்தளமான hallo.gr.ch இல் குடிவரவாளர்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்களைப் பாருங்கள். மாநில நல்வரவுக் கைநூல்கள் மற்றும் hallo.gr.ch என்பவை குறித்து பொத்தான் "நாளாந்த வாழ்வு" இல் அழுத்தி அறிந்து கொள்ளலாம். இந்த தளத்தில் நீங்கள் குறிப்பாக அகதிகளை இலக்காகக் கொண்ட தகவல்களையும் காணலாம்.

உங்களுக்கு ஒரு வெற்றிகரமான ஒத்துழைத்து ஊக்குவிக்கும் செயல்முறையாக அமைய நாங்கள் வாழ்த்துகின்றோம். கேள்விகளுக்கு மற்றும் இவ் விடயங்கள் குறித்து உங்களுக்கு உதவ நாங்கள் விருப்பத்துடன் உள்ளோம்.

உங்கள் ஒத்துழைத்து ஊக்குவிக்கும் குழுவினர்