Aus- und Weiterbildung
நீங்கள் எவ்வாறு ஒரு தொழிலைக் கற்றுக்கொள்ளலாம், எவ்விதமான EBA- மற்றும் EFZ-தொழில்கள் உள்ளன மற்றும் தொழிலைக் கற்றபின்பு ஏன் தொடர்ந்தும் கற்பது முக்கியம் என்பவை குறித்து எங்கு நீங்கள் அறிந்து கொள்ளலாம்-இவ் விதமான மற்றும் பிற கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் இங்கே காணலாம்.
ஒரு தொழிலை ஒருவர் எவ்வாறு கற்றுக்கொள்வது?
பாடசாலைக்குப் பின்பு, சுவிசில் மூன்று இளையோர்களில் இருவர் தொழிற்பயிற்சியை நிறைவுசெய்கின்றனர். வயதுவந்தோரும் தொழிற்பயிற்சியை செய்துகொள்ளலாம். இது தொழிலைப் பொறுத்து மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் நீடிக்கும். தொழிற்பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த பின்பு பயிற்சியாளர்கள் கூட்டாட்சி சான்றிதழைப் பெற்றுக்கொள்வார்கள் (EFZ). குறைவான திறமையுடன் கற்பவர்களுக்கான இரண்டு வருடப் பயற்சியும் உள்ளது. இது கூட்டாட்சி தொழில் தகமைச் சான்றிதழுடன் (EBA) நிறைவுபெறும்.
சுவிசில் தொழிற்பயிற்சியின் விசேட அம்சம் என்னவென்றால் பாடசாலை மற்றும் தொழில் அனுபவத்தின் கலவையாகும். இது இரட்டை அமைப்பு என்று அழைக்கப்படுகின்றது. வழமையாக தொழில்பயிற்சி பெறுபவர்கள் தொழிலகத்தில் வாரத்தில் நான்கு நாட்களே வேலை செய்கின்றனர்-சில தொழில்களில் இன்னும் குறைவாக- அங்கு அவர்கள் செய்முறை அறிவைப் பெறுகின்றனர். ஏனைய வார நாட்களில் அவர்கள் ஒரு தொழில் பயற்சிப் பாடசாலைக்குச் சென்று, தத்துவக் கோட்பாடுகளைக் கற்கின்றனர்.
தொழில் பாடசாலையில் திறமையாகக் கற்பவர்கள் மேலதிகமாக ஒரு தொழில்நுட்பக் கல்லூரிக்கு செல்லலாம், அது தொழிற்கல்வி இளங்கலைப் பட்டத்துக்கு வழிவகுக்கும். ஒருவர் கற்கும் காலத்தில் அல்லது அதன் முடிவில் இதை நிறைவுசெய்யலாம்.
அடிப்படைத் தொழிற்பயிற்சி இல்லாத வயதுவந்தோருக்குத் தொழில்முறைத் தகுதியைப்பெற பல்வேறு வழிகள் உள்ளன. இது குறித்து உங்கள் தொழில் பயிற்றுனர் அல்லது இணையத்தளம் berufsberatung.ch. இல் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
எவ்விதமான EBA- தொழில்கள் உள்ளன?
பல்வேறு தொழில்துறைகளில் 60க்கும் மேற்பட்ட EBA-தொழில்கள் உள்ளன. இதுகுறித்து berufsberatung.ch. தளத்தில் நீங்கள் ஒரு கண்ணோட்டத்தைச் செலுத்தலாம்.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்தபின்பு நீங்கள் ஒரு தொழிலைத் தேடுவதுடன் கற்றுக்கொண்ட தொழிலை ஆரம்பிக்கலாம். திறமையாகச் செயற்பட்டால் தொழில் பயிற்சியை தொடர்ந்து செய்து கூட்டாட்சி அரச சான்றிதழைப் (EFZ) பெறுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.
எவ்விதமான EFZ-தொழில்கள் உள்ளன?
வித்தியாசமான தொழில்துறைகளில் ஏறத்தாழ 180 EFZ-தொழில்கள் உள்ளன. இதுகுறித்து berufsberatung.ch. தளத்தில் நீங்கள் ஒரு கண்ணோட்டத்தைச் செலுத்தலாம்.
பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்தபின்பு நீங்கள் ஒரு தொழிலைத் தேடுவதுடன் கற்றுக்கொண்ட தொழிலை ஆரம்பிக்கலாம். இதன்போது ஒரு உயர் தொழிற்கல்வியைக் கற்பதற்கு சந்தர்ப்பம் உள்ளது. தற்சமயம் நீங்கள் ஒரு தொழிற்கல்வியில் இளம்கலைப்பட்டத்தைப் பெற்றிருந்தால் நீங்கள் ஒரு உயர் துறைசார் கல்லூரிக்குச் செல்லலாம். அத்துடன் ஒரு துணை- அல்லது தேர்ச்சிப் பரீட்சை மூலம் உங்களுக்கு, சுவிசிலுள்ள பல்கலைக்கழகங்களில் அனைத்துப் படிப்புகளுக்கும் மேலும் துறைசார் உயர் கல்லூரிகளிலும் கற்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.
நான் ஒரு தொழிற்கல்வியில் பட்டயப் படிப்பை நிறைவுசெய்ததும், எனக்கு எவ்விதமான சந்தர்ப்பங்கள் உள்ளன?
தொழில் பட்டயக்கல்வி, உயர் கல்லூரிகள் மற்றும் பல்வேறு தொடர்கல்வி நிலையங்களில் சேர்வதற்கான அடிப்படைத் தகுதியை வழங்குகின்றது.
தொழில் பட்டயக்கல்வி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழத்திற்கு எவ்வித பரீட்சைகளுமின்றி நுழைவதற்கான உரிமை உள்ளது. வழமையான நுழைதலுக்கான தகுதிகாண் முன்நிபந்தனைகளுக்குப் பதிலாக மேலதிக தொழில் அறிமுகம், தகுதியை அறியும் பரீட்சை போன்றவை இருக்கும்.
பசெரெலென்- மேலதிக பரீட்சை என்றால் என்ன? அதனால் என்ன பயன்?
எவராவது மேலதிகமாக கூட்டாட்சி அரசின் தொழில் பட்டயச் சான்றிதழில் பசெரெலென்-மேலதிக பரீட்சையில் சித்தியடைந்திருந்தால், சுவிஸ் பல்கலைக்கழகங்களின் உயர்கல்லூரிகளில் அல்லது உயர் தராதரமுடைய கல்லூரிகளில் அதை அங்கீகரிக்கச் செய்ய முடியும். பசெரெலென் பரீட்சைக்கு ஒன்றில் சொந்தமாகக் கற்க வேண்டும் அல்லது ஒரு பசெரெலென் பாடத்திட்டத்துடன் ஆயத்தப்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு தொழில் டிப்ளோமா செய்த பின்பு தொடர்ந்து கற்பதால் என்ன பயன் உள்ளது?
தற்போதுள்ள திறன்கள், திறமைகள் மற்றும் அறிவுகளை மேம்படுத்தவும், தற்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு மற்றும் புதிய பகுதிகள் மற்றும் செயற்பாடுகளை விளங்கிக்கொள்ள இவ்வாறான தொடர்ந்து கற்பவை உதவுகின்றது. தொடர்ந்து கற்கும் நடவடிக்கைகள் அதிகமாக தொழிலுக்குப் பக்கமாக பகுதிநேர அடிப்படையில் நடைபெறும்.
தொழிற்கல்விக்குப் பின்பு எந்த மாதிரியான மேலதிக பயிற்சிகள் உள்ளன? அதற்கு நிதியுதவி செய்வது யார்?
ஒருவர் தொடர்ந்து கற்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. இவை பாடநெறிகள், கருத்தரங்குகள், குறுகிய அல்லது நீண்ட கற்கைநெறியாக நடைபெறுகின்றது. இவற்றில் சில தொழில்களுக்கு அரச அங்கீகாரம் அல்லது துறைசார் பட்டங்கள் கிடைக்கும். அதிகமான தொடர் கற்கைகளுக்கு சொந்தமாகப் பணம் செலுத்த வேண்டும் அல்லது தொழில் புரியும் நிறுவனம் ஒரு பகுதியைப் பொறுப்பேற்கும். பல கற்கைநெறிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவி உள்ளது.