குடும்பம் மற்றும் தொழில்
குடும்பத்துக்கு வெளியே உங்கள் பிள்ளைக்கு எவ்விதமான பராமரிப்பு வசதிகள் உள்ளன, தாய்- மற்றும் தந்தைக்கு எவ்விதமான விடுமுறை ஒழுங்குவிதிகள் உள்ளன, குடும்ப உதவித்தொகையை யார் பெறுவார் - இவை மற்றும் மேலும் அதிகமானவற்றை இந்தப் பக்கத்தில் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
நான் வேலைக்குச் சென்றால், யார் எனது சிறிய பிள்ளையைப் பராமரிப்பது?
குழந்தைகள் மற்றும் சிறு பிள்ளைகளுக்குப் பராமரிப்புத் தேவைப்படுகின்றது. இதன்மூலம் அவர்கள் நன்கு வளர்ச்சியடைவதற்காக, பலவழிகளில் ஊக்கமும் உற்சாகமும் வழங்கப்பட வேண்டும். இந்த முக்கிய செயற்பாட்டை குடும்பத்திலுள்ள ஒருவரால் அதிகமாகப் பொறுப்பேற்க முடிவதில்லை.
ஏறத்தாழ நான்கு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு பல உள்ஊராட்சிசபைகளில் பிள்ளைகள் பராமரிப்பு அல்லது சிறுபிள்ளைகளுக்கான நாள் பராமரிப்பு உள்ளன. அங்கு சிறார்களுக்கு பகல் வேளைகளில் துறைசார் நபர்களால் பராமரிப்பும் ஊக்கமும் வழங்கப்படும். பொதுவாக பெற்றோர் தமது பிள்ளை ஒவ்வொரு நாளும், ஒருசில நாட்கள் மட்டும் அல்லது அரை நாள் மட்டும் பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்திற்கு செல்வது குறித்து முடிவு செய்யலாம்.
இதைவிடவும், பிள்ளையை ஒரு நாள் பராமரிப்புத்தாய்; அல்லது நாள் பராமரிப்புக் குடும்பத்தில; பராமரிப்பிற்காக அனுமதிக்கலாம். நாள் பராமரிப்புத் தாய் என்பவர் உங்கள் பிள்ளையை முழுநாள், அரைநாள் அல் லது மணித்தியால ரீதியாக பராமரிக்கும் பெண். இதுகுறித்த மேல திக தகவல்களை குடும்பத்துக்கு மேலதிகமான பிள்ளைப் பராமரிப்புதுறை சார் நிலையத்தில் famur பெற்றுக்கொள்ளலாம்.
யார் எனது பிள்ளையை மதிய வேளையில் அல்லது பாடசாலையின் பின்பு பராமரிப்பது?
சில நகரங்களில் நாளாந்தப் பராமரிப்பு நிலையம் அல்லது பிள்ளைகளுக்கான நாளாந்தப் பராமரிப்பு இடங்கள் உள்ளன. அங்கு பிள்ளைகள் பாலர்பாடசாலைக்கு மற்றும் பாடசாலை நேரத்திற்கு வெளியாகப் பராமரிக்கப்படுவார்கள். பிள்ளைகள் அங்கு மதியஉணவையும் உண்பார்கள். சில பாடசாலைகள் சொந்தமாக ஒரு மதியப் பராமரிப்பை வழங்குவார்கள். இது வழக்கமானதல்ல.
பல நகரங்களில் மதிய வேளைகளில் ஒரு மதிய உணவுக்கான ஆவைவயபளவளைஉh எனும் வசதி உள்ளது, அங்கு பிள்ளைகள் உண்ணலாம். நகரங்களின் பராமரிப்பு வசதிகள் குறித்து பாலர்பாடசாலையில் அல்லது பாடசாலையில் நீங்கள் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.
பராமரிப்புச் செலவுகள் பெற்றோரின் வருமானத்தில் தங்கியிருப்பதுடன் பெற்றோரால் செலுத்தப்பட வேண்டும்.
பாடசாலை விடுமுறையின்போது எனது பிள்ளை எங்கு பராமரிக்கப்படும்?
தொழில் புரியும் பெற்றோர்களில் பலருக்கு அனைத்து விடுமுறைக் காலங்களிலும் சொந்தமாக விடுமுறை எடுப்பது இயலாததாகும். பாலர்பாடசாலை மற்றும் பாடசாலைப் பிள்ளைகளுக்கு பல நகரங்களிலும் பராமரிப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன, இவற்றில் ஒருபகுதி பாடசாலையால் ஒழுங்குசெய்யப்படுகின்றன. பாடசாலைகளில் மற்றும் பராமரிப்பு நிலையங்களில் இவ்வாறான வசதிகள் குறித்து நீங்கள் கேட்டறிந்து கொள்ளுங்கள். தனிப்பட்ட ரீதியில் குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து தமது பிள்ளைகளை தாங்களே மாறி மாறிப் பராமரித்துக் கொள்ளும் ஏற்பாட்டையும் செய்து கொள்ளலாம்.
எனது பிள்ளைக்கு நோய் ஏற்பட்டுள்ளது அத்துடன் நான் வேலைக்குச் செல்ல வேண்டும் - எனது உரிமைகள் எவை?
ஒரு பிள்ளைக்கு நோய் ஏற்பட்டால், பிள்ளையைப் பராமரிப்பதற்காக பெற்றோரில் ஒருவர் மூன்று நாட்களுக்கு வீட்டில் இருக்கலாம். இந்த விதி ஒவ்வொரு நோய் வேளைகளிலும் இருக்கும். நீங்கள் உங்கள் தொழில் வழங்குனருக்கு ஒரு வைத்திய சான்றிதழ் வழங்க வேண்டும்.
இருப்பினும் பெற்றோராகிய நீங்கள் பொருத்தமான பதில் வசதிகளை (உ.ம். பிள்ளையை உறவினர் அல்லது தெரிந்தவர்கள் பராமரிப்பது) தேடவேண்டும்.
யாருக்கு தாய்மைக்கால விடுமுறை மற்றும் தாய்மைக்கான கொடுப்பனவுகள் பெறுவதற்கு உரிமையுள்ளது?
பணிபுரியும் பெண்கள் குழந்தை பெற்றுக் கொண்டால் அவர்கள் பேறுகால ஊதியம் பெற உரிமை உண்டு. இதற்கு குழந்தை பிறக்கும் வரையிலான 9 மாதத்துக்கு காப்பீடு செய்யப்பட்டிருப்பதுடன், இதே காலகட்டத்தில் குறைந்தது 5 மாதங்களாவது பணியில் இருந்திருக்க வேண்டியது கட்டாயமாகும். பேறுகால ஊதியம் பெறுவது குழந்தை பிறந்த நாளில் இருந்து தொடங்கி 14 வாரம் பூர்த்தியடைந்தவுடன் நிறைவடையும். இந்த காலகட்டத்தில் ஊதியத்தில் 80சதவீதம் வரை வழங்கப்படும். எனினும் இது நாளொன்றுக்கு அதிகபட்சம் 196.00 CHF ஆக இருக்கும்.
தந்தையருக்கான விடுமுறை மற்றும் தந்தைக்கான கொடுப்பனவுகள் என்றால் எவை அடங்குகின்றன?
தொழில்புரியும் தந்தைக்கு குழந்தை பிறந்த பின்பாக முதல் ஆறுமாத காலத்துக்குள் இரு வாரங்கள் தந்தையருக்கான விடுமுறை எடுக்கு உரிமையுள்ளது (ஆகக்கூடியது 14 நாட்கள்). ஊதியம் கிடைக்காததால் அதற்குப் பதிலாக பிறப்பதற்கு முன்பு சராசரி AHV-செலுத்தும் கட்டாயமுள்ள ஊதியத்தில் 80 %, ஆகக்கூடியது ஒருநாளுக்கு CHF 196.– பெறுவார்கள்.
தாய்மைக்காலக் கொடுப்பனவை, சொந்தமாகத் தொழில் செய்யாத தந்தையும் தொழில் வழங்குனர் ஊடாக அவருக்குப் பொறுப்பான AHV-நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ள உரிமையுள்ளது. மேலதிக தகவல்களை Graubünden சமூகக்காப்புறுதித் திணைக்களத்தின் இணையத்தளப் பக்கத்தில் நீங்கள் காணலாம்.
குடும்பக் கொடுப்பனவு யாருக்குக் கிடைக்கும்?
பணியில் இருப்பவர் குடும்ப உதவித் தொகை பெற உரிமை உள்ளவராவார். 16 வயது வரையிலான குழந்தைகளுக்கு, ஒவ்வொரு மாதமும் குழந்தை உதவித் தொகையாக CHF 220.00 வழங்கப்படுகிறது. கல்வி பயிலும் அல்லது பயிற்சி பெறும் இளம் நபர்களுக்கு அதிகபட்சமாக 25 வயது வரை மாதாந்திர கல்வி/பயிற்சி உதவித் தொகையாக CHF 270.00 வழங்கப்படுகிறது. குடும்ப உதவித் தொகையை மாத ஊதியத்துடன் சேர்த்து சம்பந்தப்பட்ட நிர்வாகம் வழங்கும். சில சூழ்நிலைகளின் கீழ், பணியில் இல்லாத பெற்றோரும் குழந்தை உதவித் தொகையைப் பெறலாம்.