Navigation

Inhaltsbereich

நீங்கள் ஒரு மொழி வகுப்பிற்குச் செல்லுங்கள் மற்றும் டொச் கதைக்கும் நபர் ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். டொச் மொழியிலான ஒரு ஊடகத்தைப் (பத்திரிகை, லுழரவுரடிந, நூலகங்கள்) பாவித்துக் கொள்ளுங்கள். முக்கிய வார்த்தைகளை ஒரு சொந்த அகராதியாக மொழிபெயர்த்துக் கொள்ளுங்கள். கற்கும் பாடங்களை மீளவும் கற்றுக்கொள்ளுங்கள். டொச் மொழியை நீங்கள் உங்கள் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய பகுதியாக்கிக் கொள்ளுங்கள்.

A0

A0.1 / A0.2 / A0.3

ஏறத்தாழ 170 பாடங்கள்

கேட்பது

  • எண்களை விளங்கிக்கொள்வது
  • நாளாந்த வாழ்வில் தனித்தனி சொற்களை விளங்கிக் கொள்ளல்

வாசித்தல்

  • தனித்தனி சொற்களை சரியாக வாசித்தல் மற்றும் விளங்கிக்கொள்ளல்

கதைத்தல்

  • குறுகிய வாக்கியங்களில் உங்களை அறிமுகப்படுத்துங்கள்
  • தெரிந்த சொற்களைத் தெளிவாக உச்சரிக்கவும்

எழுதுதல்

  • சொற்கள் மற்றும் குறுகிய வாக்கியங்களை எழுதுதல்

A1

A1.1 / A1.2

ஏறத்தாழ 100 - 180 பாடங்கள்

உங்களை மற்றும் அன்றாட வாழ்வு குறித்து சாதாரண வாக்கியங்களுடன் தகவல்களை வழங்கவும்

கேட்டல்

  • நேரத்தை விளங்கிக்கொள்ளல்
  • மிகச் சாதாரணமான தொழில் உத்தரவுகளைப் புரிந்துகொள்ளல்

வாசித்தல்

  • ஒரு அழைப்பை விளங்கிக்கொள்ளல்
  • ஒரு சாதாரண விளம்பரத்தை விளங்கிக்கொள்ளல்

கதைத்தல்

  • உங்களை மற்றும் குடும்பத்தைக் குறித்து விபரங்களைக் கூறுதல்
  • ஒரு தவணையை ஏற்படுத்தல்
  • பிள்ளை பாடசாலை வரமுடியாததை அறிவித்தல்; தொழிலகத்துக்கு நோய் ஏற்பட்டுள்ளதை நீங்கள் அறிவித்தல்

எழுதுதல்

  • ஒரு சாதாரண படிவத்தை நிரப்புதல்
  • ஒரு மிகச் சாதாரண மின்-அஞ்சல் எழுதுதல் (உ.ம். உங்கள் நோயை அறிவித்தல்)

A2

A2.1 / A2.2

ஏறத்தாழ 100 - 180 பாடங்கள்

சுவிசின் சாதாரண அன்றாட சூழ்நிலைகளை மொழி ரீதியாக மற்றும் சொந்தமாக சமாளித்தல்

கேட்டல்

  • வங்கியில் அல்லது தபால் அலுவலகத்தில் முக்கிய தகவல்களை விளங்கிக்கொள்ளல்
  • சாதாரண தொழில் உத்தரவுகளை விளங்கிக்கொள்ளல்

வாசித்தல்

  • பாடசாலையின் சாதாரண கடிதத்தை விளங்கிக்கொள்ளல்
  • சுருக்கமான முக்கிய தகவல்கள் உள்ள பத்திரிiகையின் பந்தியை விளங்கிக்கொள்ளல்

கதைத்தல்

  • ஒரு சாதாரண தொலைபேசி உரையாடலை மேற்கொள்ளல்
  • வங்கியில் அல்லது தபால் அலுவலகத்தில் தகவல்களைக் கேட்டறிதல்
  • தனிப்பட்ட அனுபவங்கள் குறித்துக் கதைத்தல், உ.ம். ஒரு பிரயாணம் குறித்து

எழுதுதல்

  • ஒரு வங்கியின் அல்லது ஒரு திணைக்களத்தின் படிவத்தை நிரப்புதல்
  • ஒரு சாதாரண தனிப்பட்ட மின்-அஞ்சலை எழுதுதல் (உ.ம். ஒரு நண்பனை அழைப்பது)

B1

 B1.1 / B1.2 / B1.3

ஏறத்தாழ 120 - 200 பாடங்கள்

  • சுவிசின் அதிக அன்றாட நிகழ்வுகளை மொழிரீதியாக சொந்தமாக சமாளித்தல்

கேட்டல்

  • பிரதான தகவல்களை உரையாடுதல், வானொலி மற்றும் தொலைபேசி அழைப்பை விளங்கிக்கொள்ளல்
  • தொழில் உத்தரவுகளை விளங்கிக்கொள்ளல்

வாசித்தல்

  • பத்திரிகைப் பந்தியிலிருந்து முக்கிய தகவல்கள் விளங்கிக்கொள்ளல்

கதைத்தல்

  • ஒரு சுவாரஸ்யமான தலைப்புக் குறித்து விவாதிக்கவும், அது குறித்து சொந்தக் கருத்தை வெளிப்படுத்தவும்
  • ஒரு பெற்றோர் கலந்துரையாடலில் பங்கேற்பது மற்றும் சேர்ந்து உரையாடுவது
  • தொழில் மற்றும் நிறுவனம் குறித்துக் கதைப்பது

எழுதுதல்

  • சாதாரண தொழில் அறிக்கைகளை எழுதுதல்
  • ஒரு தனிப்பட்ட அல்லது அரை வடிவான மின்-அஞ்சல் எழுதுதல்

B2

 B2.1 / B2.2 / B2.3

ஏறத்தாழ 180 - 200 பாடங்கள்

  • ஒரு EFZ-கற்றலை தொழில் பாடசாலையில் நிறைவேற்றுதல

கேட்டல்

  • தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல்களை தாய்மொழி பேசுபவர்களுக்கு இடையே விளங்கிக்கொள்ளல்
  • சொந்தத் துறைசார்பகுதியில் நிபுணத்துவமான விவாதங்களை விளங்கிக்கொள்ளல்

வாசித்தல்

  • சிக்கலான பந்திகளை வாசித்தல் மற்றும் முக்கிய புள்ளிகளை விளங்கிக்கொள்ளல்
  • சிக்கலான வழிமுறைகளில் சொந்தத் துறைசார் பகுதியை விளங்கிக்கொள்ளல்

கதைத்தல்

  • பல விடயங்களில் தெளிவான மற்றும் விரிவான விளக்கங்களைக் கொடுப்பது, யோசனைகளைக் கூறுவது மற்றும் உதாரணங்களை எடுத்துக்காட்டுவது
  • தெளிவான மற்றும் நடைமுறைக் காட்சிகளை காண்பிப்பதுடன் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு உடனடியாக விடையளிப்பது
  • பெரிய பதட்டமில்லாமல் ஒரு சாதாரண கலந்துரையாடலை அல்லது தாய்மொழி பேசுபவர்களுடன் ஒரு விவாதத்தை மேற்கொள்ளல்

எழுதுதல்

  • முறையான மின்-அஞ்சலை எழுதுவது (ஆட்சேபனைக் கடிதம், தொழில் விண்ணப்பம், ஆசிரியர் கடிதம்)

C1

C1.1 / C1.2 / C1.3

ஏறத்தாழ 180 - 200 பாடங்கள்

ஒரு தொழில்நுட்பக் கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் கற்பது

கேட்டல்

  • சிக்கலான கலந்துரையாடல், துறைசார் சொற்பொழிவுகள் மற்றும் விவாதங்களைப் புரிந்துகொள்ளல், நம்பிக்கையற்ற விடயங்கள் குறித்துக் கதைத்தாலும்

வாசித்தல்

  • பரந்த சிக்கலான பந்திகளைப் புரிந்து கொள்ளல் மற்றும் உள்ளார்ந்த நுணுக்கமான அணுகுமுறைகள் மற்றும் கருத்துக்களை ஏற்படுத்தல்
  • நீண்ட, புதிய கருவிகளின் சிக்கலான வழிகாட்டுதல்கள் அல்லது நடைமுறைகளை விளங்கிக்கொள்ளல்

கதைத்தல்

  • ஒரு சிக்கலான விடயத்தைப்பற்றி நன்கு கட்டமைக்கப்பட்ட விதத்தில் கதைப்பது, சொந்தக் கருத்தை வைத்து நியாயப்படுத்துவது மற்றும் காரணம் காட்டுவது மற்றும் உதாரணங்களைக் காட்டுவது
  • ஒரு துறைசார் விவாதத்தில் சேர்ந்து கதைப்பது

எழுதுவது

  • தெளிவான, சிக்கலான விடயங்கள் குறித்து நன்கு கட்டமைக்கப்பட்ட பந்திகளை எழுதுதல் (முறையான மின்-அஞ்சல்கள், அறிக்கைகள், பதிவுகள், விளக்கக் காட்சிகள்)

C2

C2.1 / C2.2 / C2.3

ஏறத்தாழ 180 - 200 பாடங்கள்

  • ஏறத்தாழ தாய்மொழி அளவில் அனைத்து திறன்களையும் காண்பித்தல் (கேட்டல், வாசித்தல், கதைத்தல், எழுதுதல்)

கேட்டல்

  • நடைமுறையில் கேட்டுக்கொண்ட அனைத்தையும் எளிதாகப் புரிந்துகொள்ளல்

வாசித்தல்

  • நடைமுறையில் வாசித்த அனைத்தையும் எளிதாகப் புரிந்துகொள்ளல்

கதைத்தல்

  • வித்தியாசமான எழுத்து வடிவ மற்றும் பேச்சு வடிவத் தகவல்களை ஒன்றுசேர்த்தல்
  • சிக்கலான விடயங்களில்கூட, நீங்கள் உடனடியாக மிகவும் சரளமாக மற்றும் துல்லியமாக வெளிப்படுத்துங்கள்

எழுதுதல்

  • சிக்கலான பந்திகளைப பொருத் தமான பாணியில் எழுதுவது