மொழி கற்பதற்கான எடுத்துக்காட்டுகள்
இங்கு நீங்கள், உங்கள் சூழலில் உள்ளவர்களுடன் யேர்மன் மொழியில் தொடர்புகொள்ள உதவும் நடைமுறை எடுத்துக்காட்டுக்களைக் காணலாம்.
யேர்மன் மொழியைக் கற்றுக்கொள்வது எவ்வாறு அமைந்துள்ளது?
-
நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு சில புதிய சொற்களை மற்றும் வெளிப்படுத்தல்களை ஒழுங்காகக் கற்றுக்கொள்வதுடன், நல்ல முன்னேற்றத்தைக் காண்பதற்காக, அவற்றைப் பயிற்சி செய்யுங்கள்.
- நீங்கள் யேர்மன் மொழியைப் பேசினால் மட்டுமே அதைக் கற்றுக்கொள்ள முடியும். நண்பர்கள், தெரிந்தவர்கள், அயலவர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் ஒழுங்காகப் பேசிக்கொள்ளுங்கள்.
- Lernapps எனும் கற்றல் பயன்பாடுகளுடன் அன்றாட வாழ்வில் சாதாரணமாகப் பாவிக்கும் சொற்கள், வசனங்கள் மற்றும் இலக்கண விதிமுறைகளை ஊக்குவித்துக்கொள்ளலாம். இவற்றில் சில இலவசமானது, உதாரணமாக Duolingo, aCho, Einstieg Deutsch.
- யேர்மன் மொழியிலான திரைப்படங்களைப் பாருங்கள். இயலுமானால் யேர்மன் மொழியிலான அடிக்குறிப்பு வசனங்களையும் வாசிக்கக்கூடியவாறு செய்துகொள்ளுங்கள். இதன்மூலம் கேட்கும்- மற்றும் வாசிக்கும் திறமையை ஊக்குவிப்பதுடன் மக்கள் எவ்வாறு பேசுகின்றார்கள் என்பதையும் அவதானித்துக் கொள்ளலாம்.
- அன்றாட வாழ்வு நிலைமைகளுக்கு ஏற்றவாறு, டொச் கதைப்பதற்கு, உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக, வார்த்தைகள் மற்றும் வெளிப்படுத்தல்களை எழுதிவைத்திருப்பது அல்லது ஞாபகத்தில் வைத்து அதை நீங்களாகவே கூறிக்கொள்வது.
டொச் பாடத்தில் நான் வழமையான டொச் கற்கிறேன், அன்றாட வாழ்வில் சுவிஸ் டொச் பேசப்படுகின்றது. நான் எவ்வாறு சுவிஸ் டொச்சை பழகிக்கொள்வது?
சுவிஸ் டொச், Graubünden இன் பகுதிகளில் மற்றும்; சுவிசில் பேசப்படும் மொழியாகும். ஒரு சொல் எவ்வாறு உச்சரிக்கப்படுகின்றது மற்றும் எந்த வாக்கியங்கள் பாவிக்கப்படுகின்றன என்பது பிரதேசங்களுக்குப் பிரதேசங்கள் வித்தியாசப்படுகின்றது. முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், சுவிஸ் டொச்சுக்கு உத்தியோகபூர்வமான எழுதும் வழக்கம் எதுவும் கிடையாது. ஆகவே குடியேறுபவர்கள் டொச் வகுப்புகளில் வழமையான டொச்சை கற்பது வழக்கமாகும் என்பதுடன் அன்றாட வாழ்வில் சுவிஸ் குடிமக்களுடன் அவர்கள் நகரங்களில் பேசப்படும் பேச்சுவழக்கை விளங்கி;க்கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும் உங்களுக்கு ஏதாவது விளங்காவிட்டால், மீளவும் கேளுங்கள் அல்லது ஆறுதலாக அல்லது வழமையான டொச்சில் உங்களுடன் கதைக்குமாறு கேளுங்கள்.
எனும் அமைப்பு இலவசமாக தாமாகக் கற்றுக்கொள்ளும் நூல்களை மற்றும் ஒரு App, ஐ குடியேறுபவர்கள் சுவிஸ் அன்றாடம் பேசும் மொழியை இலகுவாகக் கற்றுக்கொள்வதற்காக வெளியிட்டுள்ளது. இவைகளை மொழிச்சேர்க்கைகளான ஆங்கிலம்ஃவழமைடொச் ஃசுவிஸ்டொச், பார்சிஃ டாறிஃவழமைடொச்ஃசுவிஸ்டொச் மற்றும் அரபிக் ஃவழமைடொச் ஃ சுவிஸ்டொச் என்பவைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
மொழிச் சந்திப்பு GR என்றால் என்ன?
Graubünden இன் பல்வேறு நூல்நிலையங்களில், டொச் கற்பது மற்றும் மொழியை நன்றாகக் கதைப்பது மற்றும் விளங்கிக்கொள்ள விரும்பும் மக்களுக்கான ஒரு சந்திப்பு உள்ளது. இந்த வசதி இலவசமானது என்பதுடன் இதற்காக ஒரு முன்பதிவு தேவைப்படாது. இச்சந்திப்பு மற்றும் தவணைகள் குறித்த தகவல்களை இணையத்தளப் பக்கத்தில் நீங்கள் காணலாம்.