Navigation

Inhaltsbereich

இங்கு நீங்கள், உங்கள் சூழலில் உள்ளவர்களுடன் யேர்மன் மொழியில் தொடர்புகொள்ள உதவும் நடைமுறை எடுத்துக்காட்டுக்களைக் காணலாம்.

யேர்மன் மொழியைக் கற்றுக்கொள்வது எவ்வாறு அமைந்துள்ளது?

  1. நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு சில புதிய சொற்களை மற்றும் வெளிப்படுத்தல்களை ஒழுங்காகக் கற்றுக்கொள்வதுடன், நல்ல முன்னேற்றத்தைக் காண்பதற்காக, அவற்றைப் பயிற்சி செய்யுங்கள்.
  2. நீங்கள் யேர்மன் மொழியைப் பேசினால் மட்டுமே அதைக் கற்றுக்கொள்ள முடியும். நண்பர்கள், தெரிந்தவர்கள், அயலவர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் ஒழுங்காகப் பேசிக்கொள்ளுங்கள்.
  3. Lernapps எனும் கற்றல் பயன்பாடுகளுடன் அன்றாட வாழ்வில் சாதாரணமாகப் பாவிக்கும் சொற்கள், வசனங்கள் மற்றும் இலக்கண விதிமுறைகளை ஊக்குவித்துக்கொள்ளலாம். இவற்றில் சில இலவசமானது, உதாரணமாக Duolingo, aCho, Einstieg Deutsch.
  4. யேர்மன் மொழியிலான திரைப்படங்களைப் பாருங்கள். இயலுமானால் யேர்மன் மொழியிலான அடிக்குறிப்பு வசனங்களையும் வாசிக்கக்கூடியவாறு செய்துகொள்ளுங்கள். இதன்மூலம் கேட்கும்- மற்றும் வாசிக்கும் திறமையை ஊக்குவிப்பதுடன் மக்கள் எவ்வாறு பேசுகின்றார்கள் என்பதையும் அவதானித்துக் கொள்ளலாம்.
  5. அன்றாட வாழ்வு நிலைமைகளுக்கு ஏற்றவாறு, டொச் கதைப்பதற்கு, உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக, வார்த்தைகள் மற்றும் வெளிப்படுத்தல்களை எழுதிவைத்திருப்பது அல்லது ஞாபகத்தில் வைத்து அதை நீங்களாகவே கூறிக்கொள்வது.