Navigation

Inhaltsbereich

குடும்ப மொழி என்பது, பெற்றோர் பிள்ளையுடன் பேசும் மொழியாகும். பிறமொழிபேசும் பிள்ளைகள் குடும்பமொழியை (முதல்மொழி) எவ்வளவு நன்றாகக் கதைக்கின்றார்களோ, அதுபோன்று பின்பு உள்ளுர் மொழியை இலகுவாகக் கற்றுக்கொள்வார்கள். உங்கள் பிள்ளையுடன் உங்கள் மொழியில் கதைக்க நீங்கள் நேரம் எடுத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் வீட்டுவேலை செய்யும்போது, நீங்கள் உங்கள் மகளுடன் மற்றும் உங்கள் மகனுடன் கதைத்துக் கொள்ளுங்கள். அவர்களுடன் கதைக்கும்போது, அவர்கள் கூறுவதைக் கேளுங்கள் மற்றும் பதிலளியுங்கள். அவர்களுடன் ஒன்றுசேர்ந்து வெளியில்- விளையாட்டு இடங்களிற்கு, காடுகளுக்கு, கடற்பகுதிகளுக்கு செல்லுங்கள். அங்கு எவற்றைப் பார்க்கின்றீர்கள் என்பது குறித்து கதைத்துக் கொள்ளுங்கள், சொற்தொடர்களை விரிவுபடுத்துவதற்கு உதவுங்கள். ஒன்றுசேர்ந்து படப்புத்தகங்களை பார்வையிடுங்கள் அத்துடன் கதைகளைக் கூறுங்கள்.

விளையாட்டு இடங்கள் அல்லது விளையாட்டுக் குழுக்களில் உங்கள் பிள்ளைக்கு, இந்த நாட்டுப் பிள்ளைகளுடன் ஒன்றுசேர்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். புதிய மொழியில் அவர்கள் கற்றுக்கொள்ளும் சொற்கள் குறித்து நீங்கள் மகிழ்ச்சியடையுங்கள். இது அவர்கள் மேலும் சொற்களைக் கற்றுக்கொள்ள உற்சாகம் கொடுக்கும்.

எனது பிள்ளை இரண்டு அல்லது பல மொழிகளுடன் வளர்கின்றது. எங்கு நான் இதற்கு உதவி செய்வதற்கான எடுத்துக்காட்டல்களைப் பெறலாம்?

கைநூலான "என்னுடன் பேசுங்கள் மற்றும் நான் பேசுவதைக் கேளுங்கள்! " என்பதில், பெற்றோர்கள் எவ்வாறு தமது பிள்ளைகளுக்கு முதல் மொழியில் கதைப்பதற்குக் கற்றுக்கொள்ள உதவுவது என்பது குறித்து நீங்கள் எடுத்துக்காட்டல்கள் மற்றும் தகவல்களைக் காணலாம். இதில் நீங்கள், ஏன் பிள்ளைக்கு உள்ளுர் மொழியைக் கற்றுக்கொள்வது முக்கியமானது என்பது குறித்து, உதாரணமாக நண்பர்கள் மற்றும் நண்பிகளைக் கண்டறிந்து கொள்வதற்கு, இங்கு அவர்கள் மனநிறைவுடன் வாழ்வதற்கு மற்றும் பாலர்பாடசாலையில் மற்றும் பாடசாலையில் ஒரு நல்ல ஆரம்பத்தை மேற்கொள்வது குறித்து அறிந்து கொள்வதற்காகும்.

மொழி என்பது தொடர்பாடலுக்கான ஒரு சாதனமாகும். சிறுபிள்ளைகள் அதை முயற்சிசெய்து மற்றும் அதை நாளாந்தம் மற்றவர்களுடன் பரிமாற்றம் செய்து கற்றுக்கொள்கின்றார்கள். அம்மாவுடன் பொருட்களைக் கொள்வனவு செய்யச் செல்கையில், அப்பாவுடன் பேரூந்தில் பயணிக்கும்போது அல்லது விளையாட்டுக்குழுவில் அவர்களது நண்பர்கள் மற்றும் நண்பிகளுடன். பெற்றோர்கள் மற்றும் பராமாரிப்பு நபர்கள் எவ்வாறு மொழித் திறமையில் ஒரு சாதகமாகக் கற்கும் சூழலை வழங்கலாம் என்பது குறித்து, சூரிச் கல்வித் திணைக்களத்தின் 25 குறும்படங்களில் காட்டப்பட்டுள்ளது. இவை 13 மொழிகளில் கிடைக்கின்றன.

நான் எனது பிள்ளையை ஒரு விளையாட்டுக்குழுவுக்கு அனுப்பலாமா?

Iவிளையாட்டுக்குழுக்களில் பிள்ளைகளின் அபிவிருத்திக்கு ஊக்கமளிக்கப்படுவதுடன் பாலர்பாடசாலைக்கு தயார்படுத்தப்படுகின்றனர். அவர்கள், வேறு பிள்ளைகளுடன் ஒன்றுசேர்ந்திருப்பது, விளையாடுவது, பகிர்வது, ஒருவர் ஒருவரை கவனித்துக் கொள்வது, சண்டை பிடிப்பது மற்றும் அதன்பின் சமாதானமாகிக் கொள்வதைக் கற்றுக்கொள்வார்கள். உங்கள் பிள்ளைக்கு உள்ளுர் மொழியில் தேர்ச்சிபெற இதுவும் ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். விளையாட்டுக்குழுக்களின் வசதிவாய்ப்புகள் குறித்து நீங்கள் உங்கள் ஊரிலுள்ள நகரசபையில் அறிந்து கொள்ளுங்கள். கேள்விகள் இருப்பின்; ஒத்துழைத்து முன்னேற்றும் துறைசார் நிலையத்தை நீங்கள் தொடர்பு கொள்ளலாம். எம்மைத் தொடர்பு கொள்ளத் தொலைபேசி 081 257 26 38 அல்லது மின்னஞ்சல info@integration.gr.ch.