Navigation

Inhaltsbereich

இங்கு நீங்கள் பல்வேறு கேள்விகளுக்கான பயனுள்ள மேலதிக தகவல்களைக் காணலாம்.

எனது பிள்ளைக்கு, எமது சொந்த நாட்டின் மொழி, வரலாறு மற்றும் கலாச்சாரம் குறித்துக் கற்பிக்க வேண்டுமா?

மாநிலத்திலுள்ள சில நகரப் பாடசாலைகளில் Heimatlicher Sprache und Kultur (HSK) (சொந்தநாட்டு மொழி மற்றும் கலாச்சாரம்) குறித்து வித்தியாசமான பாடங்கள் நடத்தப்படுகின்றன. இதற்குப் பொறுப்பாக உதவித் தூதராலயங்கள், தூதர் அலுவலகங்கள் அல்லது அமைப்புகள் உள்ளன. அதிகமாகப் பாடங்கள் பாடசாலை வகுப்புகளின் பின்பு ஓய்வாக உள்ள மாலை வேளைகளில் அல்லது சனிக்கிழமை காலைகளில் இடம்பெறுகின்றன. உங்கள் பிள்ளையின் ஆசிரியர்களிடம் தற்போது நடைமுறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். இது குறித்த விபரங்களை மக்கள் பாடசாலையின் இணையத்தளத்தில் நீங்கள் பார்வையிடலாம்.

ஒரு கடினமான விடயத்தின்போதான அனுமதியை வழங்குவதற்கு எவ்விதமான மொழித்திறமை முன்நிபந்தனையாகவுள்ளது?

Amts für Migration und Zivilrecht (குடிவரவு மற்றும் சிவில் உரிமைக்கான திணைக்களம்) கடின விடயங்களுக்கான குழு ஊடாக ஒரு டீ-அனுமதியை வழங்குவதற்கு அதேபோன்று ஒத்துழைத்து ஊக்குவிக்கும் நோக்கில் வாழ்வுச்சூழலின் முழுநிலையும் கவனத்தில் எடுக்கப்படும்.

மொழிரீதியான ஊக்குவிப்புப் பகுதியில் அன்றாட வாழ்வை சமாளிப்பதற்கு மொழித்திறமை முன்நிபந்தனையாகும். இது பின்வருமாறு நிரூபிக்கப்பட வேண்டும்:

  • ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழித்தேர்வு ஆதாரம் A2 அளவிலானது. (Telc, ÖSD, Fide, Goetheinstitut மற்றும் வேறு)
  • ஒரு அங்கீகரிக்கப்பட்ட மொழிப் பாடசாலையில் சான்று வழங்கப்பட்ட 280 டொச் பாடங்களில் ஆகக்குறைந்தது 80மூ பங்கேற்றது மற்றும் வாய்மொழித் திறன் A2 அளவு

Iவிதிவிலக்கான சந்தர்ப்பங்களில் கல்விகற்க- மற்றும் பாடசாலைக்கு செல்லாத நபர்களுக்கு மொழிவகுப்பு ஆதாரம் இல்லாமல் அதற்காக விண்ணப்பத்தில் காரணம் காட்டப்பட்டால், ஒரு வாய்மொழி ரீதியான மொழிச்சான்று யு2 அளவில் கொடுக்கப்பட வேண்டும்.

ஒரு வைத்தியரால் வைத்திய சான்றிதழ் வழங்கப்பட்ட நபர்கள் (மொழி- மற்றும் /அல்லது காதுகேட்கும் பிரச்சினைகள், கடுமையான உள அல்லது உடல் அழுத்தங்கள்) முன்நிபந்தனையாக அன்றாட வாழ்வில் விளங்கிக்கொள்ளும் விதமாக தனிப்பட்ட முறையில் சோதனை செய்யப்படுவார்கள்.

கடினமான விடயங்களுக்கான குழுவின் விதிமுறைகள் அதேபோன்று ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான தகவல் பத்திரத்தை நீங்கள Amt für Migration und Zivilrecht (குடிவரவு மற்றும் சிவில் உரிமைக்கான திணைக்களம்) இணையத்தளத்தில் காணலாம்.

நான் மூன்றாம் நாட்டில் இருந்து குடும்பத்தை ஒன்றுசேர்ப்பதற்காக விண்ணப்பிக்க விரும்புகிறேன். எவ்வகையான மொழியறிவு முன்நிபந்தனைகளை எனது மனைவிஃஎனது கணவர்ஃ எனது இதுவரை பாடசாலை பாடசாலைக்குச் செல்லும் கட்டாயம் இல்லாத பிள்ளை (18 வயதிற்குக் குறைவானவர்) கொண்டிருக்க வேண்டும்?

விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஒன்றில் A1 அளவிலான (வாய்மொழியாக) மொழித்திறன் சான்று அல்லது ஒரு மொழிவகுப்புக்கான பதிவுச்சான்று தேவை. தற்சமயம், மொழிவகுப்புக்குப் பதிதல் நாட்டிற்குள் பயணித்த பின்னரே சாத்தியமாகுமாக இருந்தால், ஒரு மொழி வகுப்பில் கட்டாயமாகச் சேர்ந்து கற்று முடிக்கப்படும் என்ற உறுதிமொழியில் கையொப்பமிட்டு சமர்ப்பிக்க வேண்டும்.