Navigation

Inhaltsbereich

இங்கு நீங்கள் வித்தியாசமான கேள்விகளுக்கான மேலும் பயனுள்ள தகவல்களைக் காணலாம்.

வெற்றிக்கு எனது பங்களிப்பு என்ன?

மொழியை அறிந்திருத்தல்

உங்களது டொச் மொழி அறிவை மேலும் தொடர்ந்து விருத்தி செய்யுங்கள்! உதாரணமாக உங்கள் பாடங்களை ஒழுங்காக மீளவும் கற்றுக்கொள்வது, டொச் மொழிப் பத்திரிகையை மற்றும் தொலைக்காட்சியை உபயோகித்துக் கொள்வது, இந்த நாட்டவருடன் தொடர்பைத் தேடிக் கொள்வது போன்றவை ஊடாக. பரஸ்பர புரிந்துணர்வு எப்போதும் முக்கியமானது என்பதுடன் அது புதிய சந்தர்ப்பங்களை தோற்றுவிக்கின்றது.

நேரம் தவறாமையைக் கடைப்பிடித்தல்

நீங்கள் ஏற்கனவே ஒத்துக்கொண்ட நேரத்தை தவறாது கடைப்பிடியுங்கள். உங்களுக்கு வேறு முக்கிய அலுவல்கள் இருப்பின் அல்லது குறிக்கப்பட்ட நேரத்தைக் கடைப்பிடிக்க முடியாது போனால், நேரகாலத்துடன் அதுகுறித்து அறிவித்துக் கொள்ளுங்கள்.

நம்பகத்தன்மையுடன் இருத்தல்

சேர்ந்து எடுத்த முடிவுகளைக் கடைப்பிடியுங்கள். ஒரு குழுவில் கட்டாயம் ஒருவர் ஒருவரில் நம்பகத்தன்மையுடன் இருத்தல் அவசியம்.

கிடைக்கும் சந்தர்பங்களில் மகிழ்வடைதல்

தொழிலகங்களில் உங்களுக்கு சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது, உங்களது திறமைகள் மற்றும் எதை நீங்கள் அடைய விரும்புகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள். உற்சாகமுடைய, விருப்பமுள்ள மற்றும் சந்தர்ப்பங்களில் மகிழ்வடையும் நபர்களுக்கு விரைவில் ஆச்சரியமூட்டும் வேலைவாய்புகள் கிட்டலாம்.

பொறுப்புணர்வுடன் இருத்தல்

ஒவ்வொரு உத்தரவுகளையும் மிகச் சிறந்த புத்தியுடனும் தெளிந்த அறிவுடனும் நிறைவேற்றுங்கள். பிழைகளை ஏற்றுக்கொள்வதுடன் அவற்றைத் திருத்திக் கொள்ளுங்கள். எதுவும் செய்யாமல் நிற்பது ஒரு தவறான பிரதிபலிப்பைக் கொடுக்கும்.

சொந்தமாக செயலாற்றுவது

எங்கு வசதியாக உள்ளதோ- அங்கு நினைவில் கொள்ளுங்கள் மற்றும் சொந்தமாகச் செயலாற்றுங்கள். உங்களை நம்பலாம் என்பதை உங்கள் தொழிலகத்தில் காட்டிக்கொள்ளுங்கள்.

கற்பதற்கு ஆயத்தமாக இருத்தல்

எதையாவது கற்பதற்கான ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் நீங்கள் பயன்படுத்துங்கள்.

குழுவாக சேர்ந்து செயற்படல்

மற்றவர்களுக்கு உதவுங்கள், அப்போதுதான் மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

நட்புறவு மற்றும் நடந்துகொள்ளும் விதங்கள்

நுகர்வோருடன், சக ஊழியர்களுடன் மற்றும் தொழில் வழங்குனருடன் நீங்கள் நட்புறவுடன் பழகிக் கொள்ளுங்கள். «Sie» என்று அழைப்பதற்கு அவர்கள் அனுமதிக்கும் வரை «ளுநை» என்று அழைத்துக் கொள்ளுங்கள்.

ஒழுங்காக இருத்தல்

உங்களது வேலை இடத்தை நீங்கள் துப்பரவாகவும் ஒழுங்காகவும் விட்டுச் செல்லுங்கள்.

தொடர்ந்து முயற்சித்தல்

வேலை இடைக்கிடையே உங்களுக்கு சோம்பல் தருவதாக இருந்தாலும் தொடர்ந்து செல்லுங்கள். அநேக குறிக்கோள்களை தேவைப்படும் அளவிற்கு நின்றுபிடிப்பதால் மட்டுமே நீங்கள் அடைந்து கொள்ளலாம்.

வருகைதராதிருத்தல்

மிக அவசர வேளைகளில் மட்டுமே வருகைதராதிருத்தல் ஏற்றுக்கொள்ளப்படும். உங்களால் வருகைதர முடியாவிடின் அது குறித்து தொழில் வழங்குனருக்கு உடனடியாக அறிவிப்பதுடன் அதற்கான காரணத்தையும் தெரிவித்தல் வேண்டும்.

வெளித் தோற்றம்

தொழிலுக்கு ஏற்றவாறு எப்பொழுதும் சிறப்பான பராமரிப்புடன் செல்லுங்கள். உங்களது சொந்த சுகாதாரத்தைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

தெளிவானவிளக்கமில்லாவிடின்

ஏதாவது உங்களுக்கு விளங்காவிடின், அதுபற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கேட்பதால் உங்கள் ஆர்வம் வெளிக்காட்டப்படுவதுடன் சில பிரச்சினைகள் ஏற்படாமல் பாதுகாத்தும் கொள்ளலாம்.