Navigation

Inhaltsbereich

ஒரு தொழிற் பயிற்சியாளரின் கடமை என்ன, ஒரு தொழில் பயிலுனர் பெறும் நன்மை என்ன மற்றும் ஒரு அடிப்படைக் கல்வியை (தொழிற்பயிற்சியை) கற்பதற்கு எது முக்கியமானது - இவை அனைத்தயும் மற்றும் மேலும் பலவற்றை நீங்கள் இங்கே காணலாம்.

மொழி மற்றும் தொழில் கற்பதற்கான ஒத்துழைத்து ஊக்குவிக்கும் திட்டம் எவ்வாறு நடைபெறுகின்றது?

மொழி மற்றும் தொழில் கற்பதற்கு, ஒத்துழைத்து ஊக்குவிக்கும் துறைசார் நிலையம், அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் மற்றும் தற்காலிகமாக வசிக்க அனுமதிக்கப்புட்ட நபர்களுக்கு, வேறுபட்ட மற்றும் ஒன்றோடொன்று பொருந்தக்கூடிய ஊக்குவிப்புத் திட்டம் மற்றும் தொடர்ச்சியான வழிகாட்டுதல்களை வழங்குவார்கள்.

ஊக்குவிப்புத் திட்டத்தில் பின்வரும் புள்ளிகள் அடங்குகின்றன:

  • முதலாவது தகவல் நிகழ்விற்கு அழைத்தல்
  • மொழியில் தகுதியைப் பரீட்சிப்பது
  • ஒரு மொழிவகுப்பிற்கு அதுபோன்று கல்வி வாய்ப்புகளுக்கு தனிப்பட்ட முன்நிபந்தனைகள் கவனத்தில் எடுக்கப்படும் > ஆகக்குறைந்த நோக்கம் அனைத்து A2 வாய்மொழியாக, இதுதவிர A2/B1 அதுபோன்று B1/B2 கற்பதில்- அல்லது கல்வியில் திறமையானவர்களுக்கு.
  • மொழியில் ஒத்துழைத்து ஊக்குவிக்கும் நடவடிக்கையில் சேர்ந்து கொள்ளுதல்
  • தகவல் நிகழ்வு "தொழில் ஊக்குவிப்பு"
  • தொழில் பயிற்சியாளர் ஊடான தனிப்பட்ட ஊக்குவிப்பு மற்றும் ஆதரவு
  • A1/A2 மொழித் தராதரத்தை வைத்திருக்கும் பங்கேற்போருக்கு, வழமையாக 3-வாரங்கள் செய்முறைப் பயிற்சி (PAF ) வழங்கப்படும். செய்முறைப்பயிற்சியில் காண்பிக்கப்படும் திறமையை அடிப்படையாகக் கொண்டு தொழில் பயிற்சியாளருடன் ஒன்றிணைந்து அடுத்த படிநிலைகள் குறித்து தீர்மானிக்கப்படும் (குறுகியகால தொழில் அறிமுகம், தொழில் பயிற்சி, பகுதி ஊதிய முறை போன்றவை)
  • B1 மொழித் தராதரம் வைத்துள்ள பங்கேற்பவர்களுக்கு, அவர்களுக்கான முன்நிபந்தனைகளை கவனத்தில்கொண்டு ஊக்குவிக்கப்படுவார்கள் (மேலும் தகமையாக்குதல், தொழில்பயிற்சி மற்றும் மேலும் தொடர்ந்து கற்பது போன்றவை)

அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் மற்றும் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட நபர்கள் நீண்ட காலத்திற்கு தொழில் உலகில் தங்கள் இடத்தைக் கண்டுபிடிப்பதே இதன் நோக்கம்.

இளையோர் (16 வயதுக்கு மேல்) மற்றும் இள வயதுவந்தோரை ஒத்துழைத்து முன்னேற்றும் துறைசார் நிலையம் எவ்வாறு ஊக்குவிக்கின்றது?

  • கல்வி வாய்ப்புகள் மட்டத்தில் மொழி மற்றும் பாடசாலை ஊக்குவிப்பு மற்றும் மொழிவகுப்புகள் (B1/B2 ) மற்றும் கணிதத்தில் மேலதிக ஊக்குவிப்பு
  • மாநில பாலம் வாய்ப்புகளுக்கு அனுப்புவது குறித்த பிரயோசனமான தகவல்கள் மற்றும் உதவிகள், இதன் குறிக்கோள், தொடர்ந்து கற்பதற்கான ஒரு தீர்வைக் காணுதலாகும்
  • பாலம் வாய்ப்புகளுக்கு செல்லும் காலத்தில் ஆதரவு மற்றும் ஆலோசனை வழங்குதல்
  • பாலம் வாய்ப்புகளுக்குச் சென்ற பின்பு ஒரு தொழிலைப் பெற்றுக்கொள்ள இயலாதவர்களுக்கு, தொழில் இடத்தைத் தேட உதவி மற்றும் பங்கேற்பவர்களுக்கு ஒரு தீர்வைக்காண உதவுதல்
  • பயிற்சிக் காலத்தில் ஆதரவு மற்றும் ஆலோசனை
  • பயிற்சிக் காலத்தில் தேவைப்படும் உதவி வாய்ப்புகளுக்கு அனுப்புதல் (தன்னார்வத் தொண்டர்கள் ஊடாக கற்கும் ஆதரவு போன்றவை)

தொழில் பயிற்றுதல் என்றால் என்ன?

தொழில்பெறுவதற்கான பயிற்றுனரின் பொறுப்புகள்

  • ஒழுங்கு செய்தல், ஒன்றுசேர்ந்து செயற்படல், ஆதரவளித்தல் மற்றம் தொழில் ஊக்குவிப்பின் முதல் நடவடிக்கையை பரிசீலித்தல்.
  • அகதிகள்; மற்றும் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களைத் (எயுஃகுடü) தொழிலில் ஈடுபடுத்துவதற்காக தொழில் வழங்குனர்களை தேடிக் கண்டுகொள்ளல். இதன்போது தொழில் வழங்குனர்களுக்கும் அகதிகள்; மற்றும் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கும் (எயுஃகுடü) இடையே ஒரு துடிப்பாகச் சேர்ந்து இயங்கும் நிலையை ஊக்குவித்தல்.
  • அகதிகள்; மற்றும் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு (எயுஃகுடü) தொழில் ஊக்குவிப்பு சம்பந்தமாக ஏற்படும் அனைத்து விடயங்களிலும் ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்குவது.

நோக்கம்

  • அகதிகள்; மற்றும் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தொடர்ந்து இருக்கக்கூடிய விதத்தில் சமூக மற்றும் தொழில் ஊக்குவிப்பு வழங்குதல்.
  • இதில் பங்கேற்பவர்கள் தொழில் உலகு குறித்து ஒரு பார்வையை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும், தமது தொழில் விருப்பத்தை பரிசீலத்துக் கொள்ளலாம் மற்றும் உங்களது தொழிலில் சேர்ந்து கொள்ளும் விருப்பத்தை திட்டமிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

தொழில்பெறுவதற்கான பயிற்றுனர்

  • தெளிவான நோக்கத்தை உங்களுடன் சேர்ந்து முடிவு செய்வதுடன் அதைப் பரிசீலிப்பார்.
  • உங்களுடன் சேர்ந்து அந்த இடங்களுக்குப் பயணம் செய்வதுடன்- மதிப்பீட்டுக் கலந்துரையாடலை நடத்துவார்.
  • தனிப்பட்ட விதத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குவார்.
  • உங்களை ஊக்குவிப்பதுடன் ஆதரவளிப்பார்
  • உங்களுக்கு முக்கிய உற்சாகத்தை வழங்குவார்

தொழில் தேடுபவர்

  • தொழில் குறித்து தெளிவான குறிக்கோளைக் கொண்டிருப்பதுடன், அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும், அதை அடைவதற்கு எது தேவையென்பது.
  • ஒத்துழைத்து ஊக்குவிக்கும் திட்டம் நடைபெறும்போது இயலுமானவரை தொழிலைத் தேடுதல்.
  • தனது வசதிகளுக்கேற்ற விதத்தில் முயற்சிப்பது மற்றும் எந்த வேளையிலும் மிகச் சிறப்பாக நடந்து கொள்வது.

செய்முறைப் பயிற்சி என்றால் என்ன?

நோக்கம்

  • அடிப்படை அறிவில் “சுவிசில் தொழில் செய்வது ” என்ற விடயம் குறித்து கற்றுக்கொள்வது.
  • தனித்துவமான தொழிலை ஊக்குவிப்பதற்காக சொந்தமான சந்தர்ப்பங்களைத் தெரிந்து கொள்ளுதல்.
  • உங்களது தனிப்பட்ட திறமைகள் மற்றும் தொழில் தேடும் விண்ணப்பத்தை செயற்படுத்துதல்.
  • ஒத்துழைத்து முன்னேற்றும் திணைக்களத்தின் தொழில் பயற்றுனருடன் சேர்ந்து அடுத்த படிநிலை மற்றும் நடவடிக்கையை முடிவுசெய்தல் மற்றும் திட்டமிடல்.

பாடத்திட்டம் நடைபெறும் காலம்

  • 1. வது கிழமை; பாடத்திட்டக் கல்வி;
  • 2. மற்றும் 3 வது கிழமை; செய்முறைப் பயிற்சிமுறை > உதாரணமாக சமையலறையில், வரவேற்பு நிலையத்தில், சலவை நிலையத்தில், தொழில் நிலையத்தில் அல்லது இரும்பு-/ மர வேலைத்தலத்தலத்தில்.

உறுதியான முடிவுகள் மற்றும் சந்தர்ப்பங்கள்

  • வித்தியாசமான செயற்பாடுகள் மற்றும் தொழில்களை கண்டுகொள்ளல்.
  • மனஉறுதி மற்றும் குறைகளை மதிப்பிடல்
  • சொந்த தொழில் திறமைகளை கண்டுகொள்ளல்
  • தொழில் நடைமுறை மற்றும் தொழில் வேகத்தை அறிந்து கொள்ளல்.

மேலதிக முன்னெடுப்புகள்

  • ஒத்துழைத்து முன்னேற்றும் திணைக்களத்தின் தொழில் பயற்றுனர், உங்களது திறமைகள் குறித்த விபரம், உங்கள் தொழில் விண்ணப்பப்படிவம் மற்றும் செயல்முறைத் திட்டம் என்பனவற்றைப் பெற்றுக் கொள்வார்.
  • தொழில் பயிற்றுனருடனான தனிப்பட்ட கலந்துரையாடலில், கிடைக்கப்பெற்ற பதில்கள் மற்றும் நடைமுறைப் பயிற்சிக்கு மேலதிகமாக செய்ய வேண்டிய அடுத்த திட்டங்கள் குறித்து உங்களுடன் கதைக்கப்படும்.

தொழில் பயிற்சி என்றால் என்ன?

நோக்கம்

  • ஒரு தொழிலகத்தில் பல மாதங்களுக்கு ஒரு தொழிலை செய்து பார்த்தல்.
  • தொழிலுக்குத் தேவையான நிபுணத்துவம்- மற்றும் மொழித் திறமையை நடைமுறையில் பயன்படுத்துதல்.
  • தொழில் திறமையில் உள்ள தகுதி மற்றும் அளவை வழமையான தொழில் நாட்களின்போது பரீட்சித்துக்கொள்வது.
  • சிறப்பான வகையில் மற்றும் தேவைப்படும் வேளையில் ஒரு தொழில் வழங்குனர், தொழிலைப் பழகிப் பார்த்து முடிந்தபின், காண்பிக்கப்பட்ட பொறுப்புணர்வு மற்றும் காணக்கூடியதாகவிருந்த திறமைகளுக்காக ஒரு தொழிற்கல்விக்கான இடத்தையோ, ஒரு பகுதிநேர அல்லது நிரந்தர வேலைக்கு நியமனம் செய்யலாம்.

பழகிப் பார்த்தல் குறித்த நிபந்தனைகள்

  • தொழிலைப் பழகிப் பார்ப்பதை ஆரம்பிப்பதற்கு முன்பாக அது குறித்த நிபந்தனைகள் கலந்துரையாடப்பட்டு, ஒப்பந்தம் மூலமாக உறுதிசெய்யப்பட்டு, அனைத்துப் பகுதியினராலும் கையொப்பம் இடப்படும். இதற்கான காலம் ஒவ்வொரு வேளையிலும் தனிப்பட்ட விதத்தில் தீர்மானிக்கப்படும்.

உறுதியான முடிவுகள் மற்றும் சந்தர்ப்பங்கள்

  • நீங்கள் உங்கள் திறமைகள் மற்றும் பொறுப்புணர்வை காண்பித்துக் கொள்ள வேண்டும்.
  • உங்களுக்கு தரப்பட்டுள்ள தொழில் பழகும் வாய்ப்பு ஊடாக, உங்களது செயற்பாட்டை பிற தொழிலாளர்களோடு ஒப்பிட்டுக்கொள்வதற்கும், உங்கள் பொறுப்புணர்வு குறித்து கற்றுக்கொள்வதற்கும் சரியாக மதிப்பீடு செய்வதற்கும் சந்தர்ப்பம் உள்ளது.
  • நீங்கள் இயலுமானவரை உங்கள் தொழில் திறமையை வெளிப்படுத்த முயல்வதுடன், ஒரு சிறப்பான பொதுக் கருத்து உருவாகச் செய்ய வேண்டும்.
  • நீங்கள் தொழில் உலகில் புதிய உறவுகள் மற்றும் நண்பர்களின் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
  • உங்களது டொச் அறிவை மிக அதிகளவில் திறமையாக்கலாம்.
  • தொழிலைப் பழகிப் பார்த்த முடிவில் தொழில் வழங்குனரிடமிருந்து ஒரு நற்சான்றுப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வீர்கள். சிறப்பான நற்சான்றுப்பத்திரம் தொழில் தேடுவதற்கும், அடுத்த படியை திட்டமிடுவதற்கும் உதவியாக இருக்கும்.

இதன் தொடர்ச்சியான சந்தர்ப்பங்கள்

  • மேலும் ஒரு தொழிலைப் பழகிப் பார்ப்பது
  • ஒத்துழைத்து முன்னேற்றும் நிலையத்தினால் நடத்தப்படும் இதுவரை பங்கேற்காத பாடத்திட்டம் ஒன்றில் பங்கேற்பது.
  • தொழிலில் நிபுணத்துவம் பெற மேலதிக பயிற்சி வகுப்பு
  • ஒரு வழக்கமான தொழிற்கல்வி
  • ஒரு பகுதி வேலை – அல்லது நிரந்தர நியமனம்.

பகுதி ஊதியப் படிமுறை என்றால் என்ன?

நுழைதல்:

  • 6மாத அறிமுகப் பயிற்சி (ஆகக்கூடியது)

ஆரம்பம் பகுதி ஊதியம்:

  • 6மாதங்கள் ஊதியத்துடன் 1 வது கற்கை வருடம்
  • 6மாதங்கள் ஊதியத்துடன் 2 வது கற்கை வருடம்
  • 6மாதங்கள் ஊதியத்துடன் ஆகக் குறைந்தது CHF 2‘500.-

படிநிலைத் திட்டம் நடைபெறும்போதான தெரிவுகள்:

  • தொழிற்கல்வியை தொடங்குதல்
  • வழக்கமாக தொழிலகங்களால் வழங்கப்படும் ஊதியத்துடன் வேலைக்கு அமர்த்தப்படல்
  • இடைநிறுத்துதல்

நிபந்தனை:

  • தொழிலுடன் சேர்ந்ததான வகுப்புகள் (மொழி வகுப்பு ஃ பொதுவான கற்கைநெறிஃ நிபுணத்துவம் வாய்ந்த கற்கை நெறிகள்) பகுதி ஊதியக் காலத்தில் கட்டாயமானதாகும்.

குறிக்கோள்:

  • ஒரு தொழிற்பகுதியில் நீண்ட காலத்துக்கு தொழில் செய்வதற்கான ஊக்குவிப்பு, இதனுடன் தொழில் மற்றும் மேற்கல்விக்கான வசதிகள்.
  • தொழில் புரிவதற்கான சிறந்த தகமைகள் மற்றும் தொழில் அனுபவம்
  • மொழிப்பயிற்சி வளர்ச்சியடைதல் டீ1 வாய்மூலமான வரை.

எந்தத் தொழில் எனக்குப் பொருத்தமானது என்பதை, எவ்வாறு நான் கண்டுகொள்ளலாம்?

உங்கள் தொழில் பயிற்சியாளர் உங்களுக்குத் தொழில் தெளிவுபடுத்தலின் பல்வேறு வாய்ப்புகள் குறித்து எடுத்துக்காட்டுவார். இவற்றில் உதாரணமாகப் பின்வருவன அடங்கும்:

அடிப்படை தொழிற்பயிற்சியை முடிப்பதற்கான முன்நிபந்தனைகள் என்ன?

முக்கிய முன்நிபந்தனைகளில் அடங்குபவை:

  • டொச் தரம் B1, ஒவ்வொரு தொழில்துறையைப் பொறுத்து B2 (வாய்மொழி மற்றும் எழுத்து மூலமாக சித்திபெற்ற Telc -பரீட்சைகள்)
  • சிறந்த கணித அறிவு
  • தானாகவே கற்றல் மற்றும் கற்றல் உத்திகள்
  • தொழில் கல்வியை, முழுமையாக ஆதரிக்க விருப்பம்
  • தனிப்பட்ட முறையில் மற்றும் மொழி ரீதியாக வளர விருப்பம்
  • 100% நேரம் ஒதுக்குதல் (பகுதிநேரம் சாத்தியமில்லை)
  • நீங்கள் 2 - 4 வருடங்கள் சமூக உதவியில் வாழக் கடமைப்பட ஆயத்தமாக இருத்தல் (பயிற்சிபெறுபவர்களுக்கான ஊதியம் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்யாது)

ஒரு EBA அல்லது EFZ அடிப்படைக் கல்வியானது நல்ல பாடசாலை மற்றும் மொழியியல் கல்வித் தேவைகள், சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் கற்பிக்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் மட்டுமே சாத்தியமாகும்.