குடும்பங்கள்
குடும்ப மீள் ஒருங்கிணைப்புக் குறித்த கேள்விகள் இருந்தால் நீங்கள் எங்கே தொடர்பு கொள்வது, காணாமற்போன உறவினர்களைத் தேடுவதற்கு யார் உதவிசெய்வார்கள், கட்டாய திருமணம் செய்ய வற்புறுத்தப்பட்டால் நீங்கள் எங்கு உதவி மற்றும் ஆலோசனையைப் பெறலாம் - இவ்விதமான மற்றும் மேலதிக கேள்விகளுக்கு இந்தப் பக்கத்தில் நீங்கள் பதில்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
குடும்பத்துடன் மீள் இணைவது குறித்து எனக்கு கேள்விகள் உள்ளன. நான் யாரைத் தொடர்பு கொள்வது?
சுவிசில் அகதிகள் குடும்பத்துடன் மீள் இணைவதற்கான சட்டரீதியான உரிமை சிக்கலானது. அடிப்படை ரீதியாக இது அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்கு (அடையாளஅட்டை B) செல்லுபடியாகும், தற்காலிகமாக வதிவிட அனுமதிபெற்ற அகதிகள் (அடையாளஅட்டை F) மற்றும் தற்காலிகமாக வதிவிடஅனுமதி பெற்ற நபர்களுக்கு (அடையாளஅட்டை F) வித்தியாசமான நிபந்தனைகள் மற்றும் விதிகள் உண்டு.
Bündner Beratungsstelle (Bündner தஞ்சம் கோருவோருக்கான ஆலோசனை நிலையம்) குடும்பத்துடன் மீள் இணைவதற்கான கேள்விகள் இருந்தால் உதவி மற்றும் ஆலோசனை வழங்குவார்கள். தஞ்ச உரிமை விதிகளுக்கான அடையாட அட்டையின் இரகத்தைப் பொறுத்து கட்டணம் அறவிடப்படும்.
Schweizerische Flüchtlingshilfe இணையத்தளத்தில் (சுவிஸ் அகதிகள் உதவி) நீங்கள் தஞ்சஉரிமை அடையாள அட்டை மற்றும் முக்கிய குடியுரிமைகளான குடும்ப மீள் இணைவு, மாநிலம் மாறுதல், தொழில், சமூகஉதவி அல்லது வெளிநாட்டுக்குப் பயணமாதல் போன்றவை குறித்துப் பார்வையிடலாம்.
Schweizerischens Rotes Kreuz (சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கம்) இன் விளக்க வீடியோப்படமான "சுவிசில் குடும்பத்துடன் மீள ஒன்றிணைவது" என்பதில், நீங்கள் எவருக்கு குடும்பத்துடன் மீள ஒன்றிணைவதற்கு உரிமையுள்ளது அல்லது எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்பவற்றை அறிந்து கொள்ளலாம். இந்த விளக்க வீடியோ அரேபியம், டாறி / பார்சி, ஆங்கிலம், தமிழ், ரிகிறின்யா மற்றும் துருக்கிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
எனக்கு மிக நெருக்கமான நபர் ஒருவர் காணாமற்போயுள்ளார். எந்த நிலையம் அவரைத் தேடுவதற்கு எனக்கு உதவ முடியும்?
சுவிசில் வசிக்கும் அனைத்து நபர்களும், அவர்களது குடும்ப உறுப்பினர் அல்லது அவர்களுக்கு நெருக்கமான ஒரு நபர் காணாமற்போயிருந்தால், Schweizerisches Rotes Kreuz (சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கம்) இன் தேடும் சேவையை அணுகலாம். அவர்கள் தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்குவதுடன் தேடும் விடயம் எந்தளவில் உள்ளது என்பது குறித்து ஒழுங்காக அறியத்தருவார்கள். இந்தத் தேடும்சேவையை தொடர்புகொள்வதற்கான தொலைபேசி 058 400 43 80 அல்லது மின்னஞ்சல tracing@redcross.ch
Internationales Komitee vom Roten Kreuz (IKRK) (அனைத்துலக செஞ்சிலுவை ஒன்றியம்) இணையத்தளத்தின் familylinks.icrc.org ஐவெநசயெவழையெடநn முழஅவைநநள எழஅ சுழவநn முசநரண (அனைத்துலக செஞ்சிலுவை ஒன்றியம்) இணையத்தளத்தின் கயஅடைலடiமௌ.iஉசஉ.ழசப எனும் பக்கத்தில், காணாமற்போன நபர்களை இணையவழி ஊடாகவும் தேடலாம். கடுமையான பேரிடர் சூழ்நிலையின்போது நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினரைத் தேடலாம், காணாமற்போனவர்களின் பெயர்ப் பட்டியலைக் காணலாம், ஐரோப்பாவிலுள்ள நபர்கள், தமது உறவினர்களைத் தேடினால் அவர்களின் படங்களைக் காணலாம் அல்லது நீங்கள் ஐரோப்பாவில் எவரையாவது தேடினால், உங்களின் சொந்தப் படத்தை வெளியிடச் செய்யலாம். இந்த இணையத்தளம் அரேபியம், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஸ்பானிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
நான் எனது குடும்பத்தை அல்லது வேறு நபர்களை திருமணத்திற்கு வற்புறுத்தலாமா?
சுவிசில் ஒரு துணைவரையோ அல்லது துணைவியையோ சொந்த விருப்பில் தேடுவதற்கு சட்டரீதியான உரிமையுண்டு. குடும்பம் மற்றும் வேறு நபர்களுக்கு, ஒரு பெண்ணையோ அல்லது ஆணையோ அவர்களது விருப்பத்துக்கு எதிராகத் திருமணத்துக்கு கட்டாயப்படுத்துவதற்கு எவ்வித உரிமையுமில்லை. ஆலோசனை மற்றும் உதவிகளுக்கு நீங்கள் பின்வரும் நிலையங்களை அணுகலாம்:
Fachstelle Zwangsheirat (துறை கட்டாயத் திருமணம்)
0800 800 007 (இலவச உதவித் தொடர்பு)
info@zwangsheirat.ch
www.zwangsheirat.ch
Opferhilfe Graubünden ( பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி- Graubünden மாநிலத்தின் ஆலோசனை நிலையம்)
081 257 31 50
opferhilfe@soa.gr.ch
www.soa.gr.ch
உங்களது விபரங்கள் மிகவும் இரகசியமாகக் கையாளப்படும். இதற்கான ஆலோசனை இலவசமானது.