Navigation

Inhaltsbereich

எது உங்களுக்கு சிறப்பான சமூக தொடர்புடனான வலைப்பின்னலை ஏற்படுத்த உதவும், நீங்கள் எவ்வாறு தொடர்பாடும் இடங்கள் மற்றும் சந்திக்கும் மையங்களை கண்டுகொள்ளலாம், எங்கு நூலகங்கள் உள்ளன - இவை மற்றும் மேலதிகமானவற்றை நீங்கள் இந்தப் பக்கத்தில் காணலாம்.

Graubünden இன் பழக்கவழக்கங்களை நான் எவ்வாறு அறிந்து கொள்வது?

தனிப்பட்ட முறையில் பழகுவது மற்றும் சமூகத்தில் தொடர்பு கொள்ளும் விதிமுறைகள் நாடுகள் மற்றும் பிராந்தியங்களைப் பொறுத்து வித்தியாசப்படும். வேறு நாடுகளிலிருந்து வரும் மக்கள், உள்ளுர் பழக்கவழக்கங்களை அறிந்து கொள்வதுடன், அதை நீங்கள் பழகிக் கொள்ள வேண்டும். இதற்கு உதவும் முகமாக, உங்களை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம், நான் இருந்து வந்த நாட்டில் எவ்வாறு இருக்கும்? அத்துடன் இங்கு மக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதை அவதானிக்க வேண்டும். அத்துடன் நீண்ட காலமாக இங்கு வாழும்; மக்களுடன் கலந்துரையாடினால், இங்கு எவ்வாறான விதிமுறைகள் உள்ளன என்பது குறித்து எவராவது விளக்கமளித்து உதவுவார்கள்.

ஒரு சிறப்பான சமூகத் தொடர்பான வலைப்பின்னல் இருந்தால், எனக்கு ஏற்படும் நன்மை என்ன?

எம்மில் பலர் சமூக ஊடகங்களில் உதாரணமாக Facebook, Instagram அல்லது Twitter இல் பல வேறு மனிதர்களுடன் வலைப்பின்னலாகத் தொடர்புகொண்டுள்ளனர். இந்தக் காணொளித் தொடர்பு பல்வேறு காரணங்களால் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது, உதாரணமாக தாயகத்திலுள்ள குடும்பங்கள் மற்றும் நண்பர்களுடன் தொடர்பைக் கொண்டிருக்க உதவுகின்றன.

இருப்பினும் எமது நாளாந்த வாழ்வுக்கு நாங்கள் தனிப்பட்ட சந்திப்புகளுடன் உடல் சமூக ரீதியான வலைப்பின்னல்களை நம்பியுள்ளோம். மற்றவர்களுடன் ஒன்றிணைந்து, அவர்களுடன் உரையாடி, கருத்துக்கள், அனுபவங்கள் மற்றும் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம், நாம் பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குகின்றோம். இது உறுதியான மற்றும் தொடர்ந்து செல்லக்கூடிய உறவுகளுக்கு மற்றும் வலைப்பின்னல்களுக்கு அடிப்படையாக அமைகின்றது. இத்தகைய சமூக வலைப்பின்னல்கள் தொழில் ரீதியான மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் உதவியாக இருக்கும். கொடுப்பது மற்றும் பெறுவது என்ற ரீதியில் இது இயங்குகின்றது. உதாரணமாக உங்களுக்குத் தெரிந்த ஒருவர், ஒரு வீடு வெறுமையாவது குறித்து அறிவிக்கிறார், அவர் நோய்வாய்ப்பட்டு இருந்தால் நீங்கள் அவருக்காகப் பொருட்கள் வாங்கலாம்.

வெவ்வேறு பின்னணியிலுள்ள மக்களுடன் வலைப்பின்னலாக தொடர்பில் இருப்பது சிறந்தது.

தொடர்படும் இடங்கள் மற்றும் சந்திக்கும் மையங்களை நான் எவ்வாறு கண்டுகொள்ளலாம்?

சந்திப்புகள் எங்கும் இடம்பெறுகின்றன, கொள்வனவில், தொழிலில், அயலாரிடம், விளையாட்டில் அல்லது விளையாட்டரங்கு போன்றவைகளில். இருப்பினும் சிலவேளைகளில் தஞ்சம் கோரியவர்களுக்கு உள்நாட்டவருடன் தொடர்பு கொள்வது அவ்வளவு இலகுவாக இருப்பதில்லை. ஆகவே தஞ்சம் கோரியவர்கள் மற்றும் உள்நாட்டவர்கள் ஒருவர் ஒருவருடன் உரையாடவும் புதிய சமூகத் தொடர்புகளை ஏற்படுத்தவும், பல அமைப்புகள் மற்றும் சங்கங்கள் தொடர்பாடும் இடங்கள் மற்றும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளன. இவ்வாறான வசதிகள் குறித்து நீங்கள் வசிக்கும் ஊரின் நகரசபையில் அறிந்து கொள்ளுங்கள். இது குறித்த விபரங்களை Fachstelle Integration (ஒத்துழைத்து முன்னேற்றும் துறைசார் நிலையம்) வழங்குகின்றது. தொலைபேசி 081 257 26 38 அல்லது மின்னஞ்சல் info@integration.gr.ch.

எங்கு நூலகங்கள் மற்றும் மேசை விளையாட்டு இரவலகங்கள் உள்ளன?

பெரிய உள்ளுராட்சிமண்றங்களில் பொது நூல்நிலையங்கள் உள்ளன. இது குறித்த தகவல்களை உங்கள் குடியிருப்பாளர் பதிவகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

உயர் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நிகழ்ச்சிகள்

உயர் கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் நூலகங்கள்- மற்றும் ஊடகநிலையங்களுக்கு பகுதிரீதியாக வெளியாரும் செல்வதற்கு அனுமதியுண்டு. இது குறித்த வசதிகள் மற்றும் திறந்திருக்கும் நேரங்களை அவர்களது இணையத்தளப் பக்கத்தில் விபரமாக நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Kantonsbibliothek Graubünden (மாநில நூலகம் Graubünden)

Kantonsbibliothek Graubünden (மாநில நூலகம் Graubünden) Chur இல் உள்ளது. இது மாணவர்களுக்கு- கற்பவர்களுக்கு- அத்துடன் மத்திய அரச வரலாற்றுக் காப்பக நூலகம் மற்றும் பாரிய அளவில் இலக்கியம், திரைப்படம், இசை போன்ற பகுதிகளுக்கான விடயதானங்களைக் கொண்டுள்ளது.

Stadtbibliothek Chur (நகர நூலகம் Chur)

Stadtbibliothek (நகர நூலகம்) Chur பிறமொழி ஊடகங்களைப் பெருமளவில் கொண்டுள்ளது. இது மாலை வேளைகளிலும் வாரஇறுதியிலும் திறந்திருக்கும்.

எங்கு நான் Graubünden இன் குடியேறியோர் அமைப்புக் குறித்து அறிந்து கொள்ளலாம்?

மாநிலத்தில் ஏறத்தாழ 50 ஆண்- மற்றும் பெண் குடியேறியோர் அமைப்புகள் உள்ளன. இது குறித்த தகவல்களை உங்கள் நகரசபையில் அல்லது ஒத்துழைத்து முன்னேற்றும் துறைசார் நிலையத்தில் அறிந்து கொள்ளலாம். தொலைபேசி 081 257 26 38, மின்னஞ்சல் info@integration.gr.ch.

எங்கு நான் குடியேறிய மக்களின் ஊடகங்கள் குறித்து பார்வையிடலாம்?

குடியேறிய மக்களுக்கான பல எண்ணிக்கையான ஊடகங்கள் உள்ளன. Schweizerisches Rotes Kreuz (சுவிஸ் செஞ்சிலுவைச் சங்கம்) இன் migesmedia.ch இணையத்தளத்தில் நீங்கள் இது குறித்து பார்வையிடலாம். நீங்கள் மொழி ரீதியாக அதேவேளை ஊடக இரகம் குறித்து (உதாரணமாக அச்சிட்ட ஊடகம், இணையத்தளம், வானொலி, தொலைக்காட்சி அல்லது முகப்புத்தகம்) தேடலாம். சில ஊடகங்கள் தமது பங்களிப்புக் குறித்து பல மொழிகளில் விளம்பரம் செய்கின்றனர்.

ஒரு கழகத்தில் சேர்ந்து செயற்படுவது எனக்கு என்ன பலனைத் தரும்?

ஒவ்வொரு உள்ளுராட்சிமண்றங்களிலும் பல எண்ணிக்கையான வசதிகள் மற்றும் பெண் கள், ஆண்கள், பிள்ளைகள், இளையோர் மற்றும் முதியோருக்கான கழகங்கள் உள்ளன.

 

நாளாந்த வாழ்வில் கழகங்கள் ஒரு முக்கிய இடத்தை வகிப்பதுடன் இங்குள்ள, மனிதர்களுடன் தொடர்பை ஊக்குவிக்கின்றன. இவ்வாறு உதைபந் தாட்டக் கழகங்கள், சதுரங்கக் கழகங்கள், இசைக் கழகங்கள், கலாச்சாரக் கழகங்கள், அரசியல் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள் மற்றும் பல உள்ளன.

 

ஒரு கழகத்தில் சேர்ந்து சிறப்புடன் செயற்படுவது என்பது, அனைத்திலும் முதன்மையாக மகிழ்வையும் சமூக உறவையும் தருகின்றது. அத்துடன் இதனால் ஏதாவது பிரயோசனமானதை செய்கிறேன் என்ற நல்ல உணர்வைத் தரும். சுவிஸ் பெண்கள் மற்றும் ஆண்கள் மட்டும் இவ்வாறான கழகங்களில் சேர்ந்து செயற்படவில்லை மாறாக எப்பொழுதும் பல ஆண், பெண் குடியேற்றவாசிகளும் சேர்ந்து செயற்படுகின்றனர். அங்கு நீங்கள் உங்களது உள்ளுர் மொழியறிவை மேன்மையாக்கலாம் மற்றும் உங்களது விருப்பம் போன்றுள்ள வேறு நபர்களையும் கண்டறிந்து கொள்ளலாம். காலப்போக்கில் சொந்தமான தொடர்பு வலையை விரிவாக்குவதுடன் நகரத்தில் அல்லது வசிக்கும் இல்லத்தில் சிறப்புடன் வேரூன்றிக் கொள்ளலாம்..

 

கழகங்கள் > ஆர்வம் உள்ள அனைவருக்கும் திறந்தே உள்ளது. நீங்கள் இவைகளை தெளிவாக அறிந்துகொள்ளவும் ,மற்றும் தொடர்புகளை ஏற்படுதிக்கொள்ளவும் உங்கள் வதிவிட உள்ளுராட்சிமண்றத்தில் கேட்டறியுங்கள். அதிகமான உளுரட்சிமன்றங்கள் தங்கள் இணையத் தளத்தில் கழகங்களின் பக்கங்களை வெளியிட்டுள்ளன.

 

இம் மாநிலத்தில் பெரும் எண்ணிக்கையான குடிவரவாளர்களின் கழகங்களும் உள்ளன. இது குறித்த தகவல்களை நீங்கள் உங்கள் உள்ளுராட்சிமண்றத்தில் பெறலாம் அல்லது இணையத்தளப் பக்கம் www.integration.gr.ch அதன்கீழ் Kurse/Angebote உள்ளன.

எனது தாயகம், தோல்நிறம், சமயம், வாழ்க்கைமுறை அல்லது மொழி காரணமாக ஒதுக்குதலுக்கு உள்ளாவதாக நான் உணர்கின்றேன். நான் எங்கு இதற்கான ஆலோசனையைப் பெற முடியும்?

இன ஒதுக்குதல்களை அனைத்து வாழ்க்கைப் பகுதிகளிலும் ஏற்படலாம், உதாரணமாக தொழில் உலகில், அயலட்டத்தில், சுகாதார நிலையங்களில், பொது இடங்களில் அல்லது திணைக்களங்களுடன் தொடர்பு கொள்ளும்போது. Fachstelle Integration (ஒத்துழைத்து முன்னேற்றும் துறைசார் நிலையம்) இனரீதியான ஒதுக்குதல்களுக்கான மாநிலத் தொடர்பு நிலையமாகும், இது தகவல்கள், ஆலோசனை மற்றும் தொடர்புகளை வழங்குகின்றது. நீங்கள் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி: 081 257 26 38இ மின்னஞ்சல்: info@integration.gr.ch.