Navigation

Inhaltsbereich

எங்கு நீங்கள் நாளாந்த விடயங்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளலாம், எங்கு நீங்கள் சுவிஸ் திணைக்களங்களின் தகவல்களைக் காணலாம் மற்றும் Graubünden இல் எந்த நாட்கள் விடுமுறை விடப்படுகின்றது - இவை குறித்த மற்றும் மேலதிக கேள்விகளுக்கான பதில்களை இந்தப் பக்கத்தில் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

எங்கு நான் நாளாந்த விடயங்கள் குறித்த முக்கிய தகவல்களைக் காணலாம்?

Graubünden மாநிலத்தின் நல்வரவுக் கையேடு

Graubünden மாநிலத்தின் நல்வரவுக் கையேட்டில் நீங்கள் பல பிரயோசனமான தகவல்களான தொடர்பாடல், தொழில், குடும்பம், பிள்ளைகள், பாடசாலை, வசித்தல், சுகாதாரம், காப்புறுதி, போக்குவரத்து அல்லது சூழல்பாதுகாப்பு போன்றவைகளைக் காணலாம். இந்தக் கையேட்டின் ஒரு பகுதியில் ஆலோசனை மற்றும் உதவி வசதிகள் உள்ளடங்கியுள்ளது. இந்தக் கையேடு 19 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

பல மொழிகளிலான தலவல்தளம் hallo.gr.ch

Graubünden இல் நாளாந்த வாழ்வு மற்றும் சுவிசில் வாழ்வது குறித்த பல பிரயோசனமான தகவல்கள் நீங்கள் இணையத்தளம hallo.gr.ch இல் காணலாம். இந்தத் தகவல்கள் அல்பானிஸ், போஸ்னிஸ் ஃகொராட்டிஸ் ஃசேர்பிஸ், டறிஃபார்சி, டொச், ஆங்கிலம், பிரெஞ்சு, இத்தாலியம், போத்துக்கேயம், றொமானிஸ், ஸ்பானியம், தமிழ் மற்றும் ரிகிறின்யா மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

Informationszentrum Integration (ஒத்துழைத்து முன்னேற்றும் தகவல் நடுநிலையம)

எமது குழுவான Informationszentrum Integration (ஒத்துழைத்து முன்னேற்றும் தகவல் நடுநிலையம்) ஆலோசனை மற்றும் தகவல்கள் குறித்த உங்களது கேள்விகளுக்கு உதாரணமாக: ஒரு வீட்டைப் பெறுவதற்கு எவ்வாறு விண்ணப்பிப்பது? ஏன் எனக்கு ஒரு மருத்துவக் காப்புறுதி தேவைப்படுகின்றது? ஒரு வரவுசெலவுப் பட்டியலைத் தயாரிக்க யார் உதவுவார்கள்? எனது பிள்ளை பல மொழிகளுடன் வளருமாக இருந்தால் நான் எவ்வாறு எனது பிள்ளைக்கு உதவ முடியும்?

கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் விருப்பங்கள், எமது பொறுப்பிற்குள் அடங்காவிட்டால், அதற்குப் பொறுப்பான துறைசார்- மற்றும் ஆலோசனை நிலையங்களுக்கு நாங்கள் தொடர்பை ஏற்படுத்துவோம்.

திறந்திருக்கும நேரங்கள்:

 

செவ்வாய்கிழமை14.00 - 16.30 மணி

புதன்கிழமை 13.30 - 17.00 மணி

வியாழக்கிழமை 13.00 - 18.30 மணி (மொழி ஆலோசனையுடன்)

 

எமது துறைசார்- மற்றும் ஆலாசனை தகுதிகளை நீங்கள் பாவித்துக் கொள்ளுங்கள். நீங்கள் எம்மைத் தொலைபேசியில் அழைக்கலாம் 081 257 36 83 அல்லது மின்னஞ்சல்:

சுவிஸ் திணைக்களங்களின் தகவல்களை நான் எங்கே காணலாம்?

ஒன்றிய அரச மற்றும் மாநில தகவல்தளம் ch.ch பல பிரயோசனமான தகவல்களை தனிப்பட்டவர்கள், சுவிசில் உள்ள வெளிநாட்டவர்கள், சுகாதாரம் மற்றும் சமூகம், கல்வி மற்றும் ஆய்வு, அசைவாடல், பாதுகாப்பு, நாடு மற்றும் உரிமை போன்ற பகுதிகளுக்கு வழங்குகின்றது. இந்தத் தகவல்கள் டொச், இத்தாலியம், றொமானிஸ், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Graubünden ல் விடுமுறை நாட்கள்

க்ராவ்புண்டன் (Graubünden) மாகாணத்தில் பின்வரும் நாட்கள் பொது விடுமுறை நாட்களாகும். இந்த நாட்களில் கடைகள் மூடப்பட்டிருக்கும். இதற்கு முந்தைய நாள், கடைகள் வழக்கமாக முன்னதாகவே மூடப்பட்டுவிடும், பல கடைகள் மாலை 4 மணிக்கு மூடப்படும்.

 

  • புத்தாண்டு தினம் 1 ஜனவரி
  • புனித வெள்ளி, ஈஸ்டர் ஞாயிறு மற்றும் ஈஸ்டர் திங்கள்
  • இயேசுவின் விண்ணேற்றம்
  • விட் சண்டே (Whit Sunday) மற்றும் விட் மண்டே (Whit Monday)
  • தேசிய விடுமுறை 1 ஆகஸ்ட்
  • ஃபெடரல் ஃபாஸ்ட்
  • கிறிஸ்துமஸ் தினம் 25 டிசம்பர்
  • பாக்ஸிங் டே 26 ஜனவரி

 

எந்த விடுமுறை நாட்கள் உங்கள் பிரதேசத்தில் கொண்டாடப்படுகின்றன என்பதை, உங்கள் கிராமியசபையில் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.