Navigation

Inhaltsbereich

இங்கு நீங்கள் பல வித்தியாசமான கேள்விகளுக்கு மேலதிக பிரயோசனமான தகவல்களைக் காணலாம்.

0 மற்றும் 16 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளின் பெற்றோருக்கு பல மொழிகளிலான App வளர்ப்பு-, கல்வி- மற்றும் சுகாதார விடயங்கள் குறித்து தகவல் வழங்குவதற்காக உள்ளதா?

ஆம். இந்த App இன் பெயர் parentu அத்துடன் இதை இலவசமாக (App-Store, Google Play) பதிவிறக்கிக் கொள்ளலாம். இன்று பெற்றோராக இருப்பது எப்போதையும்விட மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். வித்தியாசமான கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் கைநூல்கள், ஆலோசனை ஏடுகள், இணையதளம் அல்லது யுpp மற்றும் வேறு இடங்களில் காணலாம். parentu-App பெற்றோர்களுக்கு தற்போதைய மற்றும் சவால்கள் நிறைந்த நாளாந்தக் குடும்ப வாழ்வு, துறைசார் ஆழ்ந்த அறிவாற்றலுடன் உதவுகின்றது. இந்தத் தகவல்கள் அல்பானிஸ், அரேபியம், போஸ்னிஸ் ஃகொராட்டிஸ் ஃசேர்பிஸ், டொச், ஆங்கிலம், பார்சி, பிரெஞ்சு, இத்தாலியம், போத்துக்கேயம், ஸ்பானியம், தமிழ,; ரிகிறின்யா மற்றும் துருக்கிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

மருத்துவக்காப்புறுதிக்கான செலவை நான் எவ்வாறு சேமிக்கலாம்?

மருத்துவக் காப்புறுதிக் கட்டணம் வீட்டுச் செலவுப் பட்டியலைப் பாதிக்கலாம். இக் கட்டணத்தைக் குறைப்பதற்கு வித்தியாசமான வழிகள் உள்ளன.

சொந்தமாகச் செலுத்தும் பணத்தை உயர்வாக்குவதன் மூலம்: சொந்த மாகச் செலுத்தும் பணம் உயர்வானதாக இருப்பின் (ஆகக்கூடியது 2500 பிராங்) மதாந்தக் கட்டணம் நன்கு குறைந்திருக்கும். அவதானம்: நீங்கள் மிகக் குறைவான நோயுடையவராகவும்

மிகக் குறைவாக வைத்தியரிடம் செல்லுபவராகவும் இருந்தால் மட்டுமே இது இலாபம் தரும். மிகவும் மலிவான மருத்துவக் காப்புறுதி மூலமாக: மருத்துவக் காப்புறுதியின் கட்டணங்கள் மற்றும் சேவைகளை ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டுப் பாருங்கள், உதாரணமாக மத்திய அரசின் இணையத்தளத்தில் கட்டணத்தைக் கணித்துக் கொள்ளுங்கள்.

தனிப்பட்ட ரீதியில் மாநிலத்தின் கட்டண உதவி மூலமாக: குறைந்த வருமானம் உடைய நபர்கள் மாநிலத்தின் கட்டண உதவியைப் பெற உரித்துடையவர்கள். அதாவது, மருத்துவக் காப்புறுதியின் ஒரு பகுதியை மாநிலம் செலுத்தும். இதைப் பெறுவதற்கான உரித்திற்கு நீங்கள் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும். இது குறித்து உங்கள்

Privathaftpflichtversicherung (சொந்தப் பிழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கான தனிப்பட்ட காப்புறுதியை) வைத்திருப்பது, ஏன் முக்கியமானது?

நீங்கள் வேறொருவருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தினால், உங்கள் முழுச் சேமிப்புகளையும் அதற்காகச் செலுத்த வேண்டி ஏற்படலாம். ஆகவே தனிப்பட்டவர்கள் அதேபோன்று குடும்பங்களுக்கு ஒரு தனிப்பட்ட காப்புறுதி செய்து, அது இப்படியான பாதிப்புகளைப் பொறுப்பெடுப்பது முக்கியமானதாகும். அதிக வேளைகளில் வீட்டை வாடகைக்குத் தருவோர் மற்றும் அதன் நிர்வாகங்கள் தனிப்பட்ட சேதங்களைப் பாதுகாப்பதற்கான காப்புறுதி ஒன்றைச் செய்து கொள்ளுமாறு கேட்பார்கள்.

சுவிசில் இப்பேற்பட்ட காப்புறுதிகளை செய்து கொள்ள பலதரமான நிறுவனங்கள் உள்ளன. அவர்களின் செயற்பாடுகளும் அவர்கள் அதற்காக கோரும் பணத் தொகையும் சரியான வித்தியாசமாகவுள்ளது. ஒப்பிட்டுப் பார்ப்பது மிகவும் நல்லது.