Navigation

Inhaltsbereich

நீங்கள் எங்கு சுவிசின் சுகாதார அமைப்புமுறை குறித்த தகவல்களைப் பெறலாம், சுவிசில் மருத்துவக் காப்புறுதி எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது, அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்விதமான சிகிச்சை வசதிகள் உள்ள - இதுகுறித்து மற்றும் மேலும் பலவற்றுக்கு இங்கு நீங்கள் விடைகளைக் காணலாம்.

எங்கு நான் சுவிசின் சுகாதார அமைப்புமுறை குறித்த தகவல்களைப் பெறலாம்?

சுவிசின் சுகாதார அமைப்புமுறை சிக்கலானது மற்றும் பல மக்களுக்கு இதுபற்றிய கேள்விகள் உள்ளன: மருத்துவக் காப்புறுதி எவ்வாறு செயற்படுகின்றது? நான் சுகவீனமுற்றால் அல்லது எனக்கு ஒரு விபத்தால் பாதிக்கப்பட்டால் நான் எங்கு செல்லவேண்டும்? ஒரு நோயாளியாக எனக்கு என்ன உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளன? நோய்கள் ஏற்படுவதற்கு முன்பான நான் என்னை எவ்வாறு பாதுகாக்கலாம்? "சுவிஸ் சுகாதார வழிகாட்டி" எனும் கைநூல் இவ்வாறான மற்றும் பல மேலதிகமான கேள்விகளுக்கு விடையளிப்பதுடன் சுவிஸ் சுகாதார அமைப்புமுறை குறித்து சுருக்கமாகவும் விளங்கக்கூடிய வகையிலும் விளக்கமளிக்கின்றது. இந்த கைநூல் 18 மொழிகளில் இலவசமாக Pனுகு - வடிவத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதியுள்ளது.

எனது பிள்ளையின் விருத்தி, பராமரிப்பு, உணவு மற்றும் வளர்ப்புக் குறித்து எனக்குக் கேள்விகள் உள்ளன. நான் எங்கு ஆலோசனையைப் பெறமுடியும்?

குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகளின் பெற்றோர்கள், பெற்றோர் ஆலோசனை நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம். இவர்களிற்கு அங்கு உணவூட்டல், கவனிப்பு, பராமரிப்பு மற்றும் வளர்ப்புக் குறித்த கேள்விகள் இருப்பின் உதவி வழங்கப்படும். அத்துடன் பிள்ளை அடிக்கடி சத்தமாக அழுதால் அல்லது அமைதியற்று இருந்தால், நீங்கள் உதவியைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக நீங்கள் ஒரு ஆலோசனை நிலையத்தை நாடலாம். பெற்றோர் ஆலோசனை அலுவலகர்கள் நீங்கள் விரும்பினால் உங்கள் வீட்டிலோ அல்லது தொலைபேசியிலோ அல்லது இணைய வழியாகவோ ஆலோசனைகளை வழங்குவார்கள். உங்கள் பிரதேசத்தின் ஆலோசனை வசதிகள் குறித்த தகவல்களை நீங்கள் உங்கள் நகரசபையில் பெற்றுக்கொள்ளலாம்.

உங்கள் பிராந்தியத்திலுள்ள ஆலோசனை வசதிகள் குறித்த தகவல்களை உங்கள் நகரசபையில் அல்லது Graubünden சுகாதாரத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

கர்ப்பம், கர்ப்பமடையாமல் முற்பாதுகாப்பது மற்றும் பாலியலால் தொற்றக்கூடிய நோய்கள் குறித்து நான் எங்கு தகவல்களைப் பெறலாம்?

Sexuelle Gesundheit Schweiz (பாலியல் சுகாதாரம் சுவிஸ்) எனும் அமைப்பு பல மொழிகளில் இணையத்தளப்பக்கம் sex-i.ch இல் பாலியல் சுகாதாரம் குறித்து துறைசார் நுட்பமான தகவல்களை வழங்குகின்றது. நீங்கள் இதில் பிறப்பு உறுப்புகள், வித்தியாசமான கருத்தடைச் சாதனங்கள், கர்ப்பமடைதல், கர்ப்பத்தைக் கலைத்தல், பிறப்பின் பின்பான கருத்தடை மற்றும் இதுபோன்று பாலியல் தொடர்புகளால் ஏற்படும் தொற்றுநோய்களுக்கான பாதுகாப்புப் போன்ற தகவல்களைக் காணலாம்.

தனிப்பட்ட ஆலோசனைக்கு உங்கள் குடும்ப ஆண் அல்லது பெண் வைத்தியரை அல்லது பாலியல் சுகாதார ஆலோசனை நிலையத்தை நாடுங்கள். Graubünden இல் நீங்கள் Adebar – Fachstelle für sexuelle Gesundheit und Familienplanung (பாலியல் சுகாதாரம் மற்றும் குடும்பத்திட்டமிடலுக்கான துறைசார்நிலையம்) ஐ நாடலாம். ஆலோசனை வழங்குபவர்களிடம் ஒரு தவணையைப் பெற்றுக்கொள்ள தொலைபேசி 081 250 34 38 அல்லது மின்னஞ்சல் beratung@adebar-gr.ch இந்த ஆலோசனை இலவசமானது.

அதிர்ச்சியான மனநோய் அனுபவங்கள் என்னை அழுத்துகின்றன. நான் எங்கு உதவி பெறலாம்?

யுத்தம், சித்திரவதை மற்றும் துன்புறுத்தல் மற்றும் இடப்பெயர்வு பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் உள விளைவுகளை ஏற்படுத்தும். உளரீதியான காயங்களைக் காணமுடியாது, இருப்பினும் அவைகள் கடுமையான துன்பங்களுக்கு வழிவகுப்பதுடன் நாளாந்த வாழ்வைப் பாதிக்கும். சிலவேளைகளில் தூங்குவதில் சிரமத்தையும் சோர்வையும் ஏற்படுத்தலாம் அல்லது பல்வேறு உடல் அறிகுறிகளை உண்டாக்கும் பய உணர்வை ஏற்படுத்தலாம். சில மனிதர்கள் ஒரு மனஅழுத்தத்த நோயால் பாதிக்கப்படலாம். இவ்வாறான அதிர்ச்சிகளால் ஏற்பட்ட மனஅழுத்தக் கோளாறு என அழைக்கப்படும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு துறைசார் நபரை அணுகவேண்டியது முக்கியமானதாகும். இதுகுறித்து மேலதிக விடயங்களை "மறப்பதற்கு முடியாமல் போனால்" எனும் கைநூலில் காணலாம், இதை 10 மொழிகளில் இலவசமாக PDF - வடிவத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.