வசித்தல்
வாடகைக்கு ஒரு வீட்டை எவ்வாறு பெறுவது என்ற கேள்விக்கான விடையை நீங்கள் எங்கு காணலாம், ஒரு வீட்டுக்கு மாறும்போது நீங்கள் எது குறித்து திட்டமிட வேண்டும், குப்பைகளை எறியும்போது நீங்கள் எவ்வாறு பணத்தை சேமிக்க முடியும்- இவ்வித மற்றும் மேலதிக கேள்விகளுக்கான பதில்களை நீங்கள் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது குறித்த பல்வேறு தகவல்களை நான் எங்கு காணலாம்?
"Wohnen in der Schweiz" ("சுவிசில் வாழ்வது") என்ற கைநூலில் நீங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது குறித்த கேள்விகளுக்கான முக்கிய பதில்களை வேறு விடயங்களுடன் சேர்த்துக் காணமுடியும்.
இதன் உள்ளடக்கத்தை கண்ணோக்கினால்:
- யார் எதைச் செய்வது? மிக முக்கிய பங்காளி
- ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது: விண்ணப்பிப்பது தொடக்கம் வீட்டை திருப்பி ஒப்படைப்பது வரை
- ஒன்றுசேர்ந்து வாழ்வது: அயலாருடன்
- தெரிந்திருப்பது நல்லது: நாளாந்த வாழ்வு குறித்த ஒருசில எடுத்துக்காட்டுகள்
- தகவல்- மற்றும் ஆலோசனை நிலையங்கள்: இங்கு தனிப்பட்ட விபரங்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெறலாம்
இக் கைநூலை Bundesamt für Wohnungswesen (வீட்டு விடயத்துக்கான மத்திய திணைக்களம்) வெளியிட்டுள்ளதுடன் 18 மொழிகளில் இப்போது இலவசமாக PDF – வடிவமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஒன்றுசேர்ந்து வாழும் வதிவிடத்தில் இருந்து ஒரு தனிப்பட்ட வீட்டிற்கு மாறுவதற்கு யாருக்கு உரிமையுள்ளது?
தற்காலிகமாக வசிக்க அனுமதிக்கப்பட்ட நபர்கள் (அடையாள அட்டை F) தனிப்பட்ட வீடுகளில் வசிப்பதானால், வழமையாக அவர்கள் நிதி விடயத்தில் போதியளவில் சொந்தமாக செலுத்தக்கூடிய நிலை இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இதற்குத் தேவையான விண்ணப்பத்தை செய்தால், பொதுவாக வசிக்கும் இல்ல நிர்வாகம் மற்றும் பராமரிப்பாளர்கள் இதற்கான அனைத்து விடயங்களையும் தனிப்பட்ட முறையில் பரிசீலனை செய்வார்கள்.
பொருளாதார ரீதியில் சொந்தமாக வாழுவதாகக் கருதப்படும் நபர்கள், தொழில் செயற்பாட்டில் ஊக்குவிக்கப்படுவதுடன் நிதி விடயத்தில் தொடர்ந்தும் சொந்தத்தில் செயற்படுவதாகக் கருதப்படுவார்கள். எவர் காலவரையற்ற தொழில் நடைமுறையில் ஆகக்குறைந்தது 80 % அல்லது பருவகால அடிப்படையில் மீளவும் மீளவும் ஒழுங்காகத் தொழில் செய்வாரானால், அவர்கள் அடிப்படை ரீதியாக தொழில் சந்தையில் ஊக்குவிக்கப்படுவார்கள்.
தனி நபர்களைப் பொறுத்தவரை ஒரு தனித் தங்குமிடத்தைப் பெறும் வேளையில் அவர் நிதி விடயத்தில் முழுவதும் சுதந்திரமாக இருக்கும் நிலை இருக்க வேண்டும். இந்த அடிப்படைவிதி பொது இல்ல நிர்வாகம் மற்றும் பராமரிப்பாளர்கள் ஒரு தனிப்பட்ட பரிசீலனைத் தீர்வு வழங்கும்போது மாற்றப்படலாம்.
அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டோர் (அடையாள அட்டை B) மற்றும் தற்காலிகமாக வசிக்க அனுமதிக்கப்பட்ட அகதிகள் (அடையாள அட்டை F) தஞ்ச முடிவு பெற்றுக்கொண்டதும் ஒரு சொந்த வீட்டைத் தேட வேண்டுமென்பதுடன் குடிவரவு மற்றும் சிவில் உரிமைத் திணைக்களத்தின் சேர்ந்து வாழும் இல்லத்திலிருந்து வெளியேற வேண்டும். அகதிகள் விரும்பினால், மாநிலம் வீடு தேடுவதற்கு உதவிசெய்யும். குடிவரவு அரச செயலரின் (SEM) முடிவு கிடைத்தவுடன், சம்பந்தப்பட்டவர்கள் மாநில சமூகசேவைத் திணைக்களத்திடமிருந்து வீடு தேடும் தகவல்கள், வெளிநாட்டவர் அடையாள அட்டை மற்றும் மேலதிக முக்கிய விடயங்கள் அடங்கிய ஒரு வரவேற்புக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வார்கள்.
நான் வேறு வீட்டிற்கு மாறப்போகிறேன். நான் எங்கு ஒரு பரிசீலிக்கும் பட்டியலைக் காணலாம், அதன் மூலம் நான் அனைத்தையும் நினைவிற் கொள்ள முடியும்?
வீடுமாற்றம் எனும்போது கட்டாயமாக பலவற்றை நினைவிற் கொள்ள வேண்டும். உதாரணமாக, உங்களை நகரசபையில் பதிவு செய்வது மற்றும் பதிவை அகற்றுவது, மின்சாரம்- மற்றும் தண்ணீர் வழங்குனர்களுக்கு அறிவிப்பது, இதன்மூலம் பாவித்த அளவை அளந்து கொள்ளலாம் அல்லது முகவரி மாற்றத்தை தபால் பகுதிக்கு அதேபோன்று வங்கிக்கு, காப்புறுதிகளுக்கு, கைத்தொலைபேசி மற்றும் இணையத்தொடர்பு வழங்குனர்கள் போன்றவர்களுக்கு அறிவிக்க வேண்டும். தகவல்தளம் Comparis இல் ஒரு வீட்டுக்கு மாறுவது குறித்து நீங்கள் பல பிரயோசனமான வழிகாட்டுதல்களைக் காணலாம். இந்தத் தகவல்கள் டொச், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
நான் ஒரு பெண் வாடகையாளியாக மற்றும் ஆண் வாடகையாளராக எதை விசேடமாக கவனத்திற்கொள்ள வேண்டும்?
பல குடும்பங்கள் வாழும் இல்லத்தில் வாழ்பவர்கள் ஒருவர் ஒருவரில் அக்கறை கொள்வது, ஒரு சிறப்பான, சமாதானமாக ஒன்றுசேர்ந்து வாழும் வாழ்க்கைக்கு முக்கியமானதாகும். இதற்காக கடைப்பிடிக்க வேண்டிய சில விதிகள் தேவைப்படுகின்றது. இவை வீட்டு ஒழுங்கில் விரிவாக விளக்கப்பட்டிருக்கும். சில முக்கிய புள்ளிகள் கீழே தரப்படுகின்றன:
இரவு அமைதி: இது வழமையாக 22 தொடக்கம் 7 மணிவரை, மதிய அமைதி 12 தொடக்கம் 13 மணி வரை. இந்த நேரங்களில், தொலைக்காட்சி மற்றும் இசைக் கருவிகளை அறைக்கு ஏற்ற சத் தத்தில் வைத்துக் கொள்வதுடன் சத்தமான வேலைகளைச் செய் யாதிருக்க வேண்டும். அத்துடன் ஞாயிறு- மற்றும் விடுமுறை நாட்களில் சத்தத்தைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். எவராவது ஒரு விழாவிற்கு நண்பர்களை அழைத்தால், அவர்கள் தமது அயலவருக்கு முன்கூட்டியே இது குறித்து அறியத்தருவது சிறந்தது.
அறை நிலங்களைத் துப்பரவு செய்வது, சுவர்கள், சமையலறை மற்றும் குளியலறை: ஒரு சிறிய இல்லம் அல்லது பெரிய வீடு எநத விதமாகத் துப்பரவு செய்யப்படுகின்றது என்பதை நீங்கள் அவதானித்துக் கொள்ளுங்கள், இது நாட்டுக்கு நாடு வித்தியாசமாக நடைபெறலாம். இது குறித்து கேள்வியிருந்தால் இல்லப் பொறுப்பாளர், வீட்டு நிர்வாகம் அல்லது வாடகைக்குத் தந்தவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
ஒன்றுசேர்ந்து பாவிக்கும் இடங்கள்/அறைகள்: வீட்டு நுழைவாயில், வீட்டுப் படிகள், பொருட்கள் வைக்கும் இடங்கள், சலவை அறை போன்றவை அனைத்து வாடகையாளருக்கும் பொதுவானது. இந்த இடங்களில் சொந்தப் பொருட்களை வைத்துக் கொள்ளாமலிருப்பதுடன் அதன் துப்பரவையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
புகைத்தல்: பல வீடுகளில் வீட்டுப் படிகளில், பொதுவாகப் பாவிக்கும் அறைகளில் அல்லது பாரம் தூக்கும் லிப்ற்றிற்குள் புகைத்தல் அனுமதிக்கப்பட்டிருக்காது. சில வீடுகள் உள்ளன, அவை புகைக்காதவர்களுக்கு மட்டுமே வாடகைக்கு வழங்கப்படும்.
கேள்விகள்: தற்சமயம் உங்களுக்குக் கேள்விகள் இருப்பின், சிறப்பாக வீட்டுப் பராமரிப்பாளர், நிர்வாகம் அல்லது வாடகைக்கு
வழங்கியவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
சலவை அறை: சலவை அறையைப் பயன்படுத்தும் விதிகளைக் கவனத்தில் கொள்வதுடன் சலவை முடிந்ததும் எப்பொழுதும் துப்பரவாக விட்டுச் செல்லுங்கள்.
நான் குப்பைகளை வெளியேற்றும்போது எவ்வாறு பணத்தைச் சேமிக்க முடியும்?
சுவிசில் அடிப்படை ரீதியாக அதற்குக் காரணமான கொள்கையுள்ளது. யார் குப்பைகளுக்கு காரணமாகின்றாரோ, அவரே அதற்கு பணம் செலுத்த வேண்டும். இக் காரணத்தால் பல நகரசபைகள் குப்பைச் சாக்குகளுக்கான கட்டணத்தைக் கேட்கின்றன. நீங்கள் குப்பைகளை தரம் பிரித்து வெளியேற்றினால், உங்களுக்குக் குறைந்தளவு குப்பைச் சாக்குகள் தேவைப்படுவதுடன் இதனால் பணத்தையும் சேமிக்கலாம். பின்வரும் குப்பைகளை நீங்கள் தரம் பிரித்து வெளியேற்றலாம்:
- கண்ணாடி மற்றும் குவளைகள்
- காகிதம் மற்றும் அட்டை
- மட்கும் குப்பை மற்றும் கிறிஸ்துமஸ் மரங்கள்
- பெரியக் கழிவுகள் (எடுத்துக்காட்டாக மரச்சாமான், தரைவிரிப்புகள்)
- மற்றும் இரும்பு
- பேட்டரிகள் மற்றும் மின்சார சாதனங்கள்
- மருந்துப் பொருட்கள்
- எண்ணெய்கள் மற்றும் பெயிண்டுகள், வார்னிஷ்கள், பாதரசம் போன்ற நச்சுப் பொருட்கள் முதலியன
- அணியக்கூடிய நிலையிலுள்ள துணிமணிகள்
எந்தக் குப்பைகள் உங்கள் வீட்டிலிருந்து எடுத்துச் செல்லப்படும் மற்றும் எந்தக் குப்பைகள் நீங்கள் சொந்தமாக பொதுச் சேகரிப்பு நிலையத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை உங்கள் நகரசபையில் கேட்டு அறிந்து கொள்ளலாம். இதன்போது முக்கியமானது என்னவென்றால்: இது குறித்த முன்நிபந்தனைகளை கவனத்திற் கொள்ளுங்கள். கண்ணாடிகள் மற்றும் போத்தல்களை நீங்கள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே போடலாம். இந்தச் சேகரிப்பு நிலையங்களுக்கு அண்மையாக வாழும் மக்கள் இதற்காக உங்களுக்கு நன்றி கூறுவார்கள்.