Navigation

Inhaltsbereich

Graubünden இல் எவ்வளவு காலம் கட்டாயப் பாடசாலைக் கல்வி நடைபெறும் மற்றும், எங்கு நீங்கள் சுவிஸ் கல்வித் திட்டம் பற்றிய தகவல்களை அறியலாம் என்பதை – நீங்கள் இங்கே காணலாம்.

 

Graubünden இல் பாடசாலை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது?

சுவிசில் பாடசாலை நடைமுறை மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப் படுகின்றது. Graubünden மாநிலத்தில் பாடசாலை 7 வயது தொடக் கம் 16 வயது வரை (ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி பிரிவு I) கட்டாயமானது மற்றும் முழுவதுமாக ஒன்பது வருடங்கள் நடைபெறும்.

 

அதிகமான பிள்ளைகள் பாடசாலை செல்லு முன்பாக இரண்டு வருட காலம் பாலர்பாடசாலைக்கு செல்வார்கள். பாலர்பாடசாலையின் பின் ஆரம்ப பாடசாலை தொடரும் (ஆறு வருடங்கள்), அதன்பின் இடைநிலைப்பள்ளி பிரிவுI (மூன்று வருடங்கள்). இல் உயர்வான மற்றும் தாழ்வான தரங்கள் உள்ளன. Graubünden ல் றியால் பாடசாலை உள்ளது (சாதாரண அறிவு), இடைநிலைப்பள்ளி (விருத்தியடைந்த அறிவு) அதேபோன்று குறைந்த உயர்கல்லுரி மற்றும் உயர்கல்லூரி உள்ளன.

 

பொதுவான பாடசாலையை மக்கள் பாடசாலை என அழைக்கப்படுவதுடன் இலவசமானதாகும். பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு ஒரு தனியார் பாடசாலையைத் தெரிவு செய்வது அவர்கள் விருப்பத்தைப் பொறுத்த தாகும். ஆனால் தனியார் பாடசாலைக்கு கட்டணம் செலுத்த வேண்டும். Graubünden மாநிலத்தில் மக்கள் பாடசாலை மற்றும் விளையாட்டுக்கான திணைக்களம் கட்டாய பாடசாலைக்குப் பொறுப்பு வகிக்கின்றது. உள்ஊராட்சிசபை பாடசாலை நிர்வாகத்தை ஒழுங்கு செய்கின்றன.

 

அனைத்துப் பாடசாலைகள் குறித்த தகவல்களை உங்கள் உள்ஊராட்சிசபையின் பாடசாலையில் அல்லது Amt für Volksschule und Sport (மக்கள் பாடசாலை மற்றும் விளையாட்டுக்கான திணைக்களத்தில்) பெற்றுக்கொள்ளலாம்.

சுவிஸ் கல்வித் திட்டம் பற்றிய மேலோட்டத்தை நான் எங்கே காணலாம்?

berufsberatung.ch இணையத்தளத்தில் சுவிஸ் நாட்டின் கல்விப்பாதைகள் மற்றும் பெறக்கூடிய முக்கிய தகமைகள் குறித்த ஒரு கண்ணோட்டத்தை நீங்கள் காணலாம்.

எங்கு நான் பாடசாலை மற்றும் தொழில் கல்வி குறித்த மேலதிக பொதுவான தகவல்களை வித்தியாசமான மொழிகளில் காணலாம்?

berufsberatung.ch இணையத்தளம் பாடசாலை மற்றும் தொழில் கல்வி குறித்த முக்கிய கேள்விகளுக்கு வித்தியாசமான பக்கங்களில் விளக்கங்களைத் தருகின்றது. இது 13 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.