Navigation

Inhaltsbereich

சுவிசில் அவசர அழைத்தலுக்கான இலக்கங்கள் எவை, எங்கு நீங்கள் உள, உடல் அல்லது பாலியல் வன்முறைக்கு உதவி பெறலாம், Graubünden இல் வேறு எவ்விதமான ஆலோசனை வசதிகள் உள்ளன- இதுகுறித்து இந்தப் பக்கத்தில் அதற்கான தகவல்களை நீங்கள் காணலாம்.

சுவிசில் அவசர அழைப்பு இலக்கங்கள் எவை?

சுவிட்சர்லாந்துக்கான அவசரகால தொலைபேசி எண்கள்
வாரத்தின் அனைத்து நாளும் 24 மணிநேரமும் தொடர்புக் கொள்ளலாம்

  • காவல் துறை: 117
  • தீயணைப்புப் படை (தீ, தண்ணீர், வாயு): 118
  • ஆம்புலன்ஸ்: 144
  • அவசரகால தொலைபேசி எண் (காவல் துறை, தீயணைப்புப் படை, ஆம்புலன்ஸ்): 112
  • சுவிஸ் விமான மீட்பு (REGA; மீட்பு ஹெலிகாப்டர்): 1414
  • நஞ்சேற்றம் (நஞ்சியல் தகவல் மையம்): 145
  • குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான தொலைபேசி உதவி: 147

எங்கு நான் Graubünden ஆலோசனை வசதிகள் குறித்து ஒரு கண்ணோட்டத்தைச் செலுத்தலாம்? ?

மாநிலத்தின் நல்வரவு கைநூலில் பல துறைசார் மற்றும் ஆலோசனை வசதிகளின் முகவரிப் பட்டியல் இடம்பெற்றுள்ளன. தற்சமயம் நீங்கள் உங்கள் தேவைக்குப் பொருத்தமான வசதிகளை அதில் காணாவிட்டால், தகவல் நடுநிலையம் Integration, Grabenstrasse 1, 7001 Chur, மேலதிக உதவிகளை வழங்கும். நீங்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்தில் 081 257 36 83 தொடர்புகொள்ளுங்கள் அல்லது மின்னஞ்சல்: info@integration.gr.ch.

இணையவழிப்பக்கமான "find-help GR" இல் சுகாதாரம் மற்றும் சமூகப் பகுதிகளுக்கான கைநூலில் நீங்கள் ஆலோசனை மற்றும் உதவி வசதிகளைக் காணலாம். ஒரு சொல்லைக் குறிப்பிட்டு மற்றும் நீங்கள் வசிக்கும் இடத்தைக் குறிப்பிட்டால் உங்களுக்கு அண்மையாக எங்கு இவ்வசதிகள் உள்ளன எனக் காண்பிக்கப்படும்.

நான் உள, உடல் அல்லது பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர். நான் எங்கு உதவியைப் பெறலாம்?

சுவிசின் அனைத்து மக்களும் உள, உடல் அல்லது பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டால், Opferhilfegesetz, (பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிச் சட்டம்) மூலம் பாதுகாப்பு, ஆதரவைப் பெறுவதற்கான உரிமை மற்றும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம். இணையத்தளம் opferhilfe-schweiz.ch பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி என்றால் என்ன, யாரை நீங்கள் தொடர்புகொள்ள வேண்டும் மற்றும் வீட்டு, பாலியல் அல்லது உடல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர் எங்கு உதவிகளைப் பெறலாம். இதுகுறித்த தகவல்கள் 15 மொழிகளில் வழங்கப்பட்டுள்ளது.

ஆலோசனை நிலையம் Opferhilfe Graubünden (பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி Graubünden) பெண்கள், ஆண்கள், பிள்ளைகள் மற்றும் இளையோர் வன்முறையால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆலோசனை மற்றும் உதவிகளை வழங்குகின்றது. இந்த ஆலோசனை இலவசமானது, நம்பிக்கையானது மற்றும் விரும்பினால் இது அடையாளம் தெரியாமல் நடத்தப்படும். Opferhilfe Graubünden (பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி Graubünden) ஐ தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இல. 081 257 31 50 அல்லது மின்னஞ்சல்: opferhilfe@soa.gr.ch.

அவசர நிலைமைகளின்போது பொலிசாரை அழையுங்கள் - தொலைபேசி 117!

Frauenhaus Graubünden (பெண்கள் இல்லம் Graubünden) என்றால் என்ன?

Frauenhaus Graubünden (பெண்கள் இல்லம்; Graubünden) பெண்கள், அவர் களது பிள்ளைகள் மற்றும் இளம் பெண்களைப் பொறுப்பேற்று பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் ஆலோசனை வழங்குகின்றது. பெண்கள் இல்லம் பாதிக்கப் பட்ட பெண்கள் எந்த நாட்டுப் பிரஜைகளாக இருப்பினும் அவர்களுக்காகத் திறந்துள்ளதுடன் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி 081 252 38 02 . ஒரு இணையத்தளம் மூலமான ஆலோசனையும் வழங்கப் படுகின்றது.